Rail Release date: ரயில் என மாறிய வடக்கன் படம்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: வெண்ணிலா கபடி குழு, எம் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 'ரயில்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து ரயில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
வடக்கன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தில், இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதை: தமிழ்நாட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் வட இந்தியர்கள் தான் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.பெரும்பாலான தமிழர்களின் வேலைகளை அவர்கள் பறித்து விட்டார்கள், இதனால் சொந்த நாட்டிலேயே வேலை இல்லாமல் பலர் வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இதனால் இதற்கு காரணமான வடக்கர்களை கொல்லாமல் விடமாட்டோம் என்றும் தமிழ்நாட்டில் இருந்து அவர்களை வெளியேற்றுவோம் என்றும் கூறும் ஒரு நபரின் கதை தான் இந்த வடக்கன் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
பெயர் மாற்றம்: இப்படம் மே மாதம் 24ந் தேதி வெளியாக இருந்த நிலையில், படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தின் தலைப்பே சர்ச்சையாக இருப்பதாகவும், இதனால் தேவையில்லாத அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வடக்கன் என்ற படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றனர். இதையேற்றுக்கொள்ளாத, படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல இருந்ததால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, தணிக்கைக்குழு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து படத்தின் தலைப்பு அதிரடியாக மாற்றப்பட்டு 'ரயில்' என தலைப்பு வைக்கப்பட்டது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு: இந்நிலையில் ரயில் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 21ந் தேதி தியேட்டரில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











