‘’ஆடு ஜீவிதம்’’ நாவலை படமாக எடுப்பது ரொம்ப கஷ்டம்.. சேலஞ்ச இருந்துச்சு.. இயக்குநர் பேட்டி!
சென்னை: மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ஆடு ஜீவிதம். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இப்படம் மார்ச் 28ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிளெஸ்ஸி, நாவலை படமாக எடுப்பது ரொம்ப கஷ்டமாக, சேலஞ்சாக இருந்தது என்று இயக்குனர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் பிருத்விராஜ், 2008ம் ஆண்டு இயக்குநர் ப்ளெஸ்ஸி என்னிடம் வந்து, நஜீப் கேரக்டரில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் எனக் கூறினார். மோகன்லால், மம்முட்டி என மலையாளத்தில் பெரிய ஸ்டார்கள் அனைவரும் ப்ளெஸ்ஸியின் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படியான முன்னணி இயக்குநர் ப்ளெஸ்ஸி என்னை அனுகியது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது.

16 வருட பயணம்: இந்த படத்திற்காக அவர், 16 வருடம் செலவிட்டது என்பது அவருடைய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. 2009ல் இந்தப்படத்தை எடுக்க திட்டமிட்டோம், அதன்பிறகு படப்பிடிப்புக்கு செல்லவே பத்து வருடங்கள் ஆகிவிட்டது. ஏன் என்றால், மலையாள சினிமாவில் அதற்கான கேமரா, இன்னும் சில விஷயங்கள் அப்போது சாத்தியமே இல்லை. மூன்று, நான்கு வருடங்கள் பாலைவனத்தில் சிக்கிய ஒருவரின் வாழ்க்கையை இந்த கதை கூறுகிறது. அப்படி இருக்கும் பொழுது படத்தின் ஆரம்பத்தில் நன்றாக எடை இருக்க வேண்டும். கேரளாவில் படப்பிடிப்பு முடித்த பின்பு ஏழெட்டு மாதங்கள் படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்.
பல ஆண்டு கழித்து: அடுத்த கட்ட படப்பிடிப்பில் எடை குறைத்து இருக்க வேண்டும் இதற்காக உடல் எடை குறைய ப்ளெஸ்ஸி அவகாசம் கொடுத்தார். பின் 2020ல் ஜோர்டான் சென்று படப்பிடிப்பை தொடங்கினோம். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே, கொரோனா வந்துவிட்டது, அதன் பின் மூன்று மாதங்கள் படப்பிடிப்பை நடத்த முடியாமல் மொத்த குழுவும் அங்கேயே சிக்கிவிட்டோம். அதன் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடங்குமா, இந்தப் படம் இனி நடக்குமா என எதுவுமே தெரியவில்லை. இப்போது பல கட்ட முயற்சிக்கு பிறகு படம் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
சவாலாக இருந்தது: இதையடுத்து பேசிய இயக்குநர் ப்ளெஸ்ஸி, ஆடு ஜீவிதம் நாவலை படமாக எடுப்பது ரொம்ப கஷ்டமாகவும், சேலஞ்சாகவும் இருந்தது. அந்த புத்தகத்தில் என்ன என்ன விஷயம் முக்கியமாக இருக்கோ, அதை ஐடியாவாக வைத்துக்கொண்டு தான் திரைக்கதை அமைக்க முடியும், அதுமட்டுமில்லாமல் இந்த கதையில் சினிமாவிற்காக புத்தகத்தில் இல்லாத சில விஷயத்தை சேர்த்து இருக்கிறோம். அதே சமயம் கதையில் எந்த லாஜிக் மீறலும் இல்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுக்க வேண்டியதாக இருந்தது அது ரொம்ப சேலஞ்சிங்காக இருந்தது என்று இயக்குநர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











