Jailer: 2023ல் பிளாக்பஸ்டர் திரைப்படம்.. வேண்டுமென்றே ஜெயிலர் படத்தை தவிர்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறது.
தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் அதிகமான வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஆனால் ஜெயிலர் படம் குறித்து தொடர்ந்து அவதூறாகவும் நெகட்டிவ்வாகவும் கமெண்ட்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன்.
2023ன் பிளாக்பஸ்டர் படங்களில் ஜெயிலர் படத்தை தவிர்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம். ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்த, அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. அண்ணன் -தங்கை சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தனர். சிவா இயக்கியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனேயே ஜெயிலர் படத்திற்காக கைகோர்த்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் சுனில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், வசந்த ரவி உள்ளிட்டவர்களும் ரஜினியுடன் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீடு, பாடல்கள் வெளியீடு, போஸ்டர் வெளியீடு என கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்கள் திணறித்தான் போனது.

படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த், படத்தின் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்ததுடன் குட்டி கதை ஒன்றையும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். சூப்பர்ஸ்டார் பட்டத்தையொட்டி இந்தக் கதை சொல்லப்பட்டதாகவும் இதில் நடிகர் விஜய்யைதான் ரஜினி குறிப்பிட்டதாகவும் கூறப்பட்டது. இதையொட்டி பல கண்டனங்களை சந்தித்தார் ரஜினி.
இந்த குட்டிக்கதையையொட்டி சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தார். மேலும் ஜெயிலர் படம் குறித்த நெகட்டிவ் செய்திகளையும் தொடர்ந்து பதிவிட்டார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாகவும் குறிப்பிட்டார். அவரை திட்டி ரஜினி ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.

ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த 2023ம் ஆண்டில் லியோ, ஜவான், சலார், கேப்டன் மில்லர் இந்தப் படங்களில் எந்தப் படம் நம்பர் ஒன் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயிலர் படம் குறித்து தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் ப்ளூ சட்டை மாறன், இந்த பட்டியலில் வேண்டுமென்றே ஜெயிலர் படத்தை விட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











