Blue sattai Maaran: கிழிஞ்சது.. அல்லு அர்ஜூனையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் கடந்த 2021 ஆண்டில் வெளியானது புஷ்பா படம். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சிவப்பு சந்தன மரக் கடத்தலை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் உருவாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக புஷ்பா படம் வெளியாகியிருந்தது. புஷ்பா படம் சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
புஷ்பா 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்திருந்த ராஷ்மிகா மந்தனா, பகத் பாசிலுடன் பிரியாமணியும் முக்கியமான கேரக்டரில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த படத்தையும் சுகுமார் இயக்கி வருகிறார். கடந்த ஆண்டில் இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியாகி மாஸ் காட்டியது. இதில் புஷ்பா கொல்லப்பட்டதால் பொதுமக்கள் ஆத்திரமடைவதாகவும் தொடர்ந்து அவர் உயிருடன் இருப்பதை அறித்து அவர்கள் உற்சாகம் அடைவதாகவும் காட்டப்பட்டது. இந்த ட்ரெயிலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்தடுத்த படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் அல்லு அர்ஜூன்: நடிகர் நடிகர் அல்லு அர்ஜுன் டோலிவுட்டின் மிக பிஸியான நடிகராக இருந்து வருகிறார். இவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்று தந்து வருகின்றன. அந்த வகையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. இந்த படத்தில் லாரி ஓட்டுனராகவும் சந்தனமரங்களை கடத்தும் நபராகவும் நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.
புஷ்பா படத்தின் வெற்றி: முதல் பாகம் 400 கோடிகளை தாண்டி வசூலித்திருந்த நிலையில் படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். அவரது இசையில் அடுத்தடுத்து படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. குறிப்பாக சமந்தா ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் அமைத்திருந்தனர். இந்த படத்தில் தன்னுடைய கெட்டப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டு நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். படத்தில் அவரது நடிப்பு மற்றும் நடனம் ஆகியவை மிகச் சிறப்பான அளவில் ரசிகர்களை ரீச் செய்தது.
புஷ்பா 2 படம்: இந்த படத்தின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தையும் இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். படத்தில் சமந்தாவிற்கு பதிலாக ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை திஷா பதானி ஆட்டம் போட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் டிரைலர் கடந்த ஆண்டில் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன் கொல்லப்பட்டதாகவும் பின்னர் அவர் உயிருடன் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் காட்டப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
அல்லு அர்ஜூனை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இதனிடையே பெர்லின் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகர் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் மூன்றாவது பாகம் உருவாக உள்ளதாக கூறியிருந்தா.ர் இந்த அவரது அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருந்தது. ஆனால் இது குறித்து தன்னுடைய twitter பக்கத்தில் பேசியுள்ள சினிமா விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன், இந்த அறிவிப்பை வெளியிட்டு கிழிஞ்சது என்று கமெண்ட் செய்துள்ளார்


Click it and Unblock the Notifications











