நீ நைட்டு ஒழுங்கா தூங்கியிருக்க மாட்ட.. கௌதம் மேனனை வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை : விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருத்தரை வம்பிழுத்து வருபவர்.
இரவின் நிழல் படம் வெளியானபோது பார்த்திபனை வம்பிழுத்த இவர், தொடர்ந்து சிம்புவை வைத்து செய்தார்.
இந்நிலையில் இவரது டார்கெட்டாக இயக்குநர் கௌதம் மேனன் உள்ளார். மிகவும் சாப்ட்டானவர் என்று கூறப்படும் கௌதம் மேனனே அவரை எதாவது செய்ய வேண்டும் என்று கடுப்புடன் கூறியுள்ளார்.

இயக்குநர் ப்ளூ சட்டை மாறன்
விமர்சகரும் ஆன்டி இந்தியன் படத்தின் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன், தொடர்ந்து ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவரை டார்கெட்டாக வைத்து தொடர்ந்து வம்பிழுத்து வருகிறார். படங்களை கஷ்டப்பட்டு இயக்கி வெளியிட்டு வரும் தங்களை இவ்வாறு விமர்சனம் என்ற பெயரில் வம்பிழுப்பது குறித்து பல நடிகர்களும் கதறாத குறைதான்.

ஆன்டி இந்தியன் படம்
விமர்சனம் செய்வது எளிது, படம் இயக்கி பார்த்தால் தெரியும் என்று பலரும் கூறியதை சீரியசாக எடுத்துக் கொண்டு இவர் ஆன்டி இந்தியன் என்ற படத்தையும் இயக்கினார். இந்தப் படம் வந்த சுவடு எதுவும் தெரியாமல் பெட்டிக்குள் முடங்கியது. அப்போதாவது இவர் அடங்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
ஆனால் முன்பை விட இவரது வேகம் அதிகமாக ஆனது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட் மூவி கிடையாது என்று பார்த்திபனை வம்பிழுத்தார். அதற்கு பார்த்திபனும் அவரது ரசிகர்களும் சரியான பதிலடி கொடுத்தனர். ஆனாலும் தொடர்ந்து பல கருத்துக்களை சொல்லி பார்த்திபனை வெறுப்பேற்றினார்.

சிம்புவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட யாரையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன், தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் நடிகர் சிம்புவே மேடையில் கூறும் அளவிற்கு அவரது உருவத்தை கேலி செய்துள்ளார். தொடர்ந்து அந்த படத்தின் இயக்குநர் கௌதம் மேனனையும் விட்டு வைக்கவில்லை.

அடுத்த டார்கெட் யார்?
அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்று தனக்கு தொடர்ந்து எண்ணம் ஏற்படுவதாக கௌதம் மேனனே சமீபத்திய பேட்டியில் வெறுப்புடன் கூறினார். எப்போதும் அமைதியாக காணப்படும் கௌதம் மேனனையும் இவர் வம்பிழுத்ததன் விளைவே இந்த பேட்டி. அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் அடுத்தப்படத்தை பிளாப்பாக்கினார். தொடர்ந்து தற்போது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் படத்தை பிளாப் ஆக்கியுள்ளார். அவரது அடுத்த டார்கெட் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோபத்தில் கௌதம் மேனன்
இதனிடையே கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்ய வேண்டும் என்று தோன்றுவதாக கூறியுள்ளதை வைத்தும் கலாய்த்துள்ளார். இறங்கி செய்வது என்றால் என்ன அடியாட்களை வைத்து அடித்தல், வழக்குப் போட்டு சிறையில் தள்ளி சிரித்தல் என அவர் பட்டியலிட்டுள்ளார்.

சரியாக தூங்கியிருக்க மாட்டே
தொடர்ந்து அடுத்த கமெண்ட்டில் படத்தின் ஒரு மீமையும் வெளியிட்டுள்ளார். முதல் புகைப்படத்தில் படம் எதிர்பார்த்தபடி இல்லையே என்று ஒருவர் கூறும்படி காணப்படுகிறது. அடுத்த புகைப்படத்தில் கௌதம் மேனன் நீ சரியாக தூங்கியிருக்க மாட்டே என்று கூறும்படி காணப்படுகிறது. முன்னதாக படத்தின் பிரமோஷனின் போது கௌதம் மேனன் படம்பார்க்க வருபவர்கள் தூங்கிவிட்டு வரும்படி கூறியிருந்ததை இவ்வாறு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











