Blue sattai Maaran: கடந்த வாரம் ரோமியோ.. இந்த வாரம் ரத்னம்.. கில்லி வசூலை பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 20ம் தேதி சர்வதேச அளவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது கில்லி படம். படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இந்தப் படம் தற்போது 20 ஆண்டுகளை கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்த படத்தின் வசூல் மிகச்சிறப்பாக அமைந்து வருகிறது.
ரீ ரிலீஸ் படங்களில் அதிகமான வசூலை ஈட்டி வரும் படம் என்ற பெருமையை கில்லி படம் பெற்றுள்ளது. தொடர்ந்து விடுமுறை கொண்டாட்டத்தை திரையரங்குகளில் கில்லி படத்துடன் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அடுத்ததாக விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் முன்னதாக கில்லி படத்தின் ரிலீஸ் ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய். திரிஷா. பிரகாஷ்ராஜ் .ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் கில்லி. தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களை அந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவில் கவர்ந்து தமிழில் முதல் 50 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையை பெற்று தந்தது. இந்தப் படத்தின் மூலம் விஜய் கமர்சியல் ஹீரோவாக தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதை தொடர்ந்து அவரது திரையுலக பாதையில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. முன்னதாக ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் படங்களில் மட்டுமே அவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கமர்ஷியல் ஹீரோ: கில்லி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் கலந்த கமர்சியல் படங்களில் விஜய் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி அதன் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றார். இந்தப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள சூழலில் தமிழ், தெலுங்கு, கர்நாடக ரசிகர்களை மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்களை மொழி பேதம் இல்லாமல் ஈர்த்து வருகிறது. விஜய்க்கு சீனா, ஜப்பான், துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ள சூழலில் இந்த படம் திரையரங்குகளில் அரங்கு கொள்ளாத காட்சிகளாக தொடர்ந்து ஓடி வருகிறது.
கில்லி ரீ -ரிலீஸ்: படம் முதல் ஐந்து நாட்களிலேயே 17 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில் தொடர்ந்து படம் வெளியாகி ஒரு வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கில்லி படம் குறித்து பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படம் குறித்து இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார். படம் சிறப்பான வசூலை பெற்று வருவதாக கூறி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்துடன் கடந்த வாரத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தை கில்லி படம் காலி செய்ததாக அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: சென்று வார இறுதியில் விஜய் ஆண்டனியின் ரோமியோவை போட்டு தள்ளிய கில்லி, இந்த வாரம் விஷாலின் ரத்னத்தை விட அதிக வசூலை குவிக்கும் என எதிர்பார்ப்பு என்று கில்லி பட போஸ்டருடன் அவர் ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து விஜய் ஆண்டனி, விஷால் உள்ளிட்டவர்கள் குறித்து ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வரும் சூழலில் தற்போது கில்லி படத்தை வைத்து அவர்களது படங்களை குறைவாக மதிப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











