Blue sattai: தலைவர் தாக்கப்பட்டார்.. இந்தியன் 2 பட ட்ரெயிலரை தாறுமாறாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சேனாபதி மற்றும் சந்துரு என இருவேறு கேரக்டர்களில் நடித்து மாஸ் காட்டியிருந்தார் கமல்ஹாசன். இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்த நிலையில் தற்போது 29 ஆண்டுகள் கழித்து படத்தின் 2வது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை கடந்த சில வாரங்களாகவே படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள கல்கி 2898 AD படம் இம்மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்த மாதத்தில் அவரது இந்தியன் 2 படமும் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது.

Kamal haasan Indian 2 movie Blue sattai maaran


நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது இந்தியன் 2 படம். இந்தப் படம் ஜூலை மாதம் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரம்மாண்டங்களின் இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் இடையில் சில காரணங்களால் முடங்கிய நிலையில் விக்ரம் படத்தின் இண்டஸ்ட்ரியல் ஹிட்டை தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் தூசி தட்டினார்.

ட்ரெயிலர் வெளியீடு: இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாத துவக்கத்தில் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்த நிலையில் முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் ட்ரெயிலரை படக்குழுவினர் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்திருந்தனர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: மாலை 7 மணிக்கு படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 6 மணிக்கு வெளியாகவிருந்த ட்ரெய்லர் தாமதப்படுத்தப்பட்டு 7 மணிக்கு வெளியானது. இந்த ட்ரெய்லர் மிகப் பிரம்மாண்டமாக ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதில் சித்தார்த் சிஸ்டம் சரியில்லை என்று வாய்க்கிழிய பேசுவோம், அனால் அதை தடுக்க ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடுறது இல்ல என்ற வசனத்தை பேசியுள்ளார். இந்நிலையில் இதை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டி உள்ள இயக்குனரும் சினிமா விமர்சகர்மான ப்ளூ சட்டை மாறன் தலைவர் தாக்கப்பட்டார் என்று விமர்சித்துள்ளார்.

https://x.com/tamiltalkies/status/1805610491529805935

ரசிகர்கள் கமெண்ட்: இந்நிலையில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொல்லிவிட்டு, கடைசியில் நீங்க புரட்சி செய்யுங்கள் என்றும் புரட்சி செய்யும் நிலையில் தான் வருவேன் என்றும் கமல் கூறி அனைவரையும் ஏமாற்றி வருவதாக ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய அளவில் மாஸ் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாகம் தற்போது வெளியாக உள்ளது. படத்தின் மூன்றாவது பாகம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் வெளியீடாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X