Blue sattai maran: 2023ல் நல்ல படங்கள்.. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட லிஸ்ட்!
சென்னை: 2023ம் ஆண்டு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. புத்தாண்டை வரவேற்க பலரும் தயாராகிவிட்டனர். பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் வெளிநாடுகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட தயாராகியுள்ளனர். இந்த ஆண்டு தமிழில் ஏராளமான படங்கள் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளன. முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமில்லாமல் குறைந்த பட்ஜெட்டில் அறிமுக நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டில் மாஸ் காட்டியுள்ளன.
கதைக்களம் சிறப்பாக இருந்தால் அது முன்னணி நடிகர்களாக இருந்தாலும் அறிமுக நடிகர்களாக இருந்தாலும் வரவேற்பு கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளதாக ரசிகர்கள் நிரூபித்துள்ளனர். டாடா, குட்நைட் என சிறப்பான பல படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதையும் இந்த ஆண்டில் பார்க்க முடிந்தது. அயோத்தி, போர் தொழில், விடுதலை போன்ற படங்களின் கதைக்களங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2023ல் தமிழ் சினிமா: 2023ம் ஆண்டு நிறைவடையவுள்ளது. புத்தாண்டை வரவேற்கும் மனநிலையில் மக்கள் அதிகமான கொண்டாட்டங்களுக்கு புக் செய்துள்ளனர். பலரும் குடும்பத்துடன் செலிபிரேஷனுக்கு திட்டமிட்டுள்ளனர். ஆயிரம் கமிட்மெண்ட்கள் இருந்தாலும் புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ள நிலையில் இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம். இந்த 2023ம் ஆண்டில் தமிழில் ஏராளமான படங்கள் வெளியான நிலையில் வெகுசில படங்களே ரசிகர்களை அதிகமாக என்டர்டெயின் செய்துள்ளது.
சிறப்பான படங்களின் பட்டியல்: இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான சிறப்பான படங்களின் லிஸ்டை இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2023 இனிமே முடிந்தது என்று தன்னுடைய பதிவை துவங்கியுள்ள அவர், இந்த ஆண்டில் 400க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இதில் சில படங்களே நல்ல படங்களாக வெளியாகியுள்ளதாகவும் அவர் பட்டியல் வெளியிட்டுள்ளார். Good movies list என்று அவர் வெளியிட்டுள்ள பட்டியலில் டாடா, அயோத்தி, விடுதலை, போர் தொழில், கூழாங்கல், கூஸ் முனுசாமி வீரப்படன் சீரிஸ் போன்ற படங்களை குறிப்பிட்டுள்ளார்.
பெஸ்ட் படங்கள்... சராசரி படங்கள்: இதேபோல சராசரியாக ரசிக்களை கவர்நத் படங்களின் பட்டியலில், அயலி சீரிஸ், கொன்றால் பாவம், யாத்திரை, பர்ஹானா, குட் நைட், தீரா காதல், பம்பர், சத்திய சோதனை டிடி ரிட்டர்ன்ஸ், அடியே, மிஸ் ஷெட்டி, மார்க் ஆண்டனி, சித்தா, 800, டைகர் 3, செவ்வாய் கிழமை, ஏழு கடல் தாண்டி சைட் பி, ஜோ, பார்க்கிங், ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்களை குறிப்பிட்டுள்ளார். ஜஸ்ட் மிஸ் லிஸ்டாக மாமன்னன், மாவீரன், டைனோசர்ஸ், பரம்பொருள் போன்ற படங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். இந்தப் படங்களின் பட்டியலில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்களை தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான படங்கள்: கடந்த ஆண்டுகளில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு திரைப்படங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாகவே இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததை போலவே எந்தவிதமான எதிர்பார்ப்பும் பிரமோஷன்களும் இல்லாமல் வெளியான படங்களும் அதன் கதைக்களத்தையொட்டி ரசிகர்களை சிறப்பாகவே என்டர்டெயின் செய்தன. அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே சிறப்பான படங்கள் ரிலீசாகவுள்ள நிலையில் திரைத்துறையில் அடுத்த ஆண்டும் மாஸாக அமையும் என்ற எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications











