Blue Sattai maaran: ஏண்டா ஏன்.. அந்தகன் -தங்கலான் படங்களின் ரிலீசை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. நீண்ட காலங்களாக திரையிலிருந்து ஒதுங்கியிருந்த பிரசாந்தின் ரீ-என்ட்ரி படமாக உருவாகியுள்ளது அந்தகன். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் பிரஷாந்த் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இரு படங்களும் சில தினங்கள் இடைவெளியிலேயே ரிலீசாக உள்ளன.
இதே போல நடிகர் விக்ரமின் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாக்கியுள்ளது தங்கலான் படம். இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில் தற்போது இந்த படமும் அந்தகன் படத்துடன் இணைந்து ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரம்: நடிகர் விக்ரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்/ தன்னுடைய மாறுபட்ட நடிப்பாலும் மெனக்கெடல்களாலும் தன்னுடைய கேரக்டரை சிறப்பாக்கும் வல்லமை படைத்த விக்ரமிற்கு அடுத்தடுத்த வெற்றிகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் அவரது கேரக்டர்கள் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று விடுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திலும் ஆதித்த கரிகாலனாக மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தார் விக்ரம். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கலான் படம்: இந்த படத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தை ஒட்டிய கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித். படத்தில் வித்தியாசமான கெட்டப்புடன் முதியவர் மற்றும் இளைஞர் என இருவேறு கேரக்டர்களில் விக்ரம் நடித்துள்ளார். படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாக இருந்த நிலையில் ரிலீஸ் தள்ளி போய் தற்போது ஆகஸ்ட் 15ம் தேதி படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அந்தகன் படம்: இந்நிலையில் நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படமும் நீண்ட காலங்களாக ரிலீஸ் தள்ளிப்போன சூழலில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரஷாந்தின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் பிரஷாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சைக்கோ திரில்லர் பாணியில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து தங்களின் ரிலீஸ் அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளன. இரண்டு படங்களும் ஒரே நாளில் மோத உள்ளது குறித்து ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே இயக்குநரும் சினிமா விமர்சகர்மான ப்ளூ சட்டை மாறன் இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீசாவது குறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கலாய்த்துள்ளார். வடிவேலுவின் ஏண்டா ஏன் என்ற காமெடியை வெளிப்படுத்தும்வகையில போஸ்ருடன் அவர் இந்தப் படங்களின் ரிலீசை கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











