தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோக்கள் பணம் சம்பாதிக்கவே சீக்வெல்கள்.. விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தற்காலங்களில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் அநேக படங்களில் அதிகமாக இரண்டாம் பாகங்கள் குறித்த அறிவிப்புடனேயே வருகின்றன. அந்த வகையில் கங்குவா உள்ளிட்ட பல படங்களில் இரண்டாம் பாகங்கள் எடுக்கப்பட உள்ளன. இதில் பிரீகுவல் என்ற முந்தைய கதைக்களங்களை காட்டும் படங்களின் கதைக்களங்கள் தனிக்கதை.
அந்த வகையில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமான இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு கடநத 2018ம் ஆண்டிலேயே வெளியானது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக படம் முடங்கிய நிலையில், நேற்றைய தினம் இந்தியன் 2 படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இயக்குநர் ப்ளூ சட்டை மாறன்: தற்காலங்களில் அதிகமாக படங்கள் மிகவும் பிரமாண்டமாக அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒவ்வொரு படமும் இரண்டாவது பாகம் குறித்து அறிவித்த பின்பே முதல் பாகத்திற்கான சூட்டிங்கை துவங்கும் நடைமுறையும் ஏற்பட்டுள்ளன. ஆனால் அது போன்று இல்லாமல் கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டில் இதன் சீக்குவலை எடுப்பது குறித்து அறிவித்த படக்குழுவினர் தொடர்ந்து அதற்கான ஷூட்டிங்கையும் மேற்கொண்டனர்.
இந்தியன் 2 படம்: ஆனால் சில பல காரணங்களால் இந்த சூட்டிங்கை தொடர முடியாத நிலையில் கடந்த ஆண்டில் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் மீண்டும் தூசி தட்டப்பட்டு நேற்றைய தினம் படம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. முதல் பாகத்தை போல இந்தியன் 2 படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. முன்னதாக முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகங்கள் குறித்து பேட்டியொன்றில் பேசியுள்ள இயக்குனர் ஷங்கர், முதல் பாகம் என்பது ஸ்காட்ச் விஸ்கியை போல என்றும் அது பல ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் 2வது பாகத்தில் நாம் என்னதான் புதிதான கன்டெண்ட்டை கொடுத்தாலும் அது ரசிகர்களை ஒப்பு நோக்கவே செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் கேள்வி: இந்நிலையில் புதிய கண்டெண்டுகளுக்கா பஞ்சம் ஏன் எடுத்த கதைகளையே இரண்டாவது பாகம் என்ற பெயரில் மீண்டும் எடுக்க வேண்டும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நம் வாழ்வியலில் அன்றாடம் நம் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் கதைக்களமாக உருவாக்க முடியும் என்பது ஒரு பக்கம் இருக்க, கதைகளுக்கே பஞ்சம் என்பது போல எடுத்த படங்களின் 2வது, 3வது, 4வது என்று அடுத்தடுத்த படங்களை தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழி படங்களும் மேற்கொண்டு வருவது தற்போது அதிகமான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கலாய்த்து வரும் இயக்குனர் மற்றும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சீக்வெல்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறப்பான சீக்வெல் படம்: இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகச்சிறந்த சீக்வெலாக வெளியானது திரிஷ்யம் 2 என்று பாராட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், முதல் பாகத்தின் சரியான தொடர்ச்சி மற்றும் திரைக்கதை இது என்று கூறியுள்ளார். பாகுபலி போன்ற சில படங்களுக்கு மட்டுமே 2ம் பாகம் தேவை என்றும் அதை ராஜமௌலி சிறப்பாக செய்திருந்தார் என்றும் கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், பொன்னியின் செல்வன் படத்திற்கும் 2வது பாகம் தேவை என்றும் ஆனால் மணிரத்னம் மொக்கையாக எடுத்து சொதப்பியதாகவும் கூறியுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியை வைத்து தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் ஹீரோக்கள் கொழுத்த பணம் சம்பாதிக்கவே பெரும்பாலான படங்களின் 2ம் பாகங்கள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
பாவம் மக்கள்: இவையெல்லாம் நன்றாக இருக்கும் என்று நினைத்து மக்களும் தங்களது காசை கரியாக்குவதாக தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன், தொடர்ந்து, அடுத்த சில வருடங்களுக்கு புதிய களம் மற்றும் சிந்தனை கொண்ட படங்களை விட இப்படியான சீக்வெல்கள்தான் லாரி லாரியாக கொட்டும் என்றும் பாவம் மக்கள் என்றும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











