Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
சென்னை: இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறமையுடன் திரைத்துறையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய் ஆண்டனி. பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள விஜய் ஆண்டனி ஒரு கட்டத்தில் நான் படம் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பாளராகவும் பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குநராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் ரோமியோ படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை மிருணாளினி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். வழக்கமாக சீரியசான கதைக்களத்தில் நடித்துவரும் விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் கலகலப்பாக நடித்திருந்தார். படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இதனிடையே இந்தப் படம் குறித்து மோசமான விமர்சனங்களை இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருந்தார்.

நடிகர் விஜய் ஆண்டனி: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக கோலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்தவர். தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, ஒரு கட்டத்தில் நான் படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார். இசையமைப்பாளராக பெற்ற வரவேற்பை நடிகராக பெறவில்லை என்றபோதிலும் மினிமம் கேரண்டி ஹீரோவாக சலீம், பிச்சைக்காரன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து தயாரிப்பாளர், பாடகர், எடிட்டர் என பல தளங்களில் பயணித்த விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குநராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.
ரோமியோ படம்: கடந்த வாரத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து ரோமியோ படம் ரிலீசானது. சீரியசான கதைக்களங்களிலேயே தொடர்ந்து நடித்துவந்த விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் கலகலப்பாக நடித்திருந்தார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் படம் வெளியானது. இந்நிலையில் இந்தப்படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் செத்து விட்டதாக இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். கூடவே ஜிவி பிரகாஷின் டியர் அவர் இணைத்தே குறிப்பிட்டிருந்தார்.
கொந்தளித்த விஜய் ஆண்டனி: இதையடுத்து விஜய் ஆண்டனி கொந்தளித்து விட்டார். ப்ளூ சட்டை மாறன் பல நல்ல படங்களை விமர்சனங்களால் கொன்று வருவதாகவும் இவரது பேச்சை உண்மை என்று நம்பி தமிழ் சினிமாவை சில அறிவு ஜீவிகள் குறை கூறுவதாகவும் இவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து விஜய் ஆண்டனியை கலாய்த்து ட்வீட்களை போட்டு வருகிறார். ரோமியோ படத்தை அன்பே சிவம் படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனிக்கு இதயமே இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் பதிலடி: மேலும் சினிமா ரசிகர்களே தரம் தாழ்ந்த விமர்சகரும் விமர்சன விஷக்கிருமியுமான ப்ளூ சட்டையின் ரோமியோ விமர்சனத்தை புறக்கணிப்பீர், அலைகடலென திரண்டு ரோமியோ ஓடும் திரையரங்குகளை நிரப்புங்கள் என்றும் அவர் கலாய்த்துள்ளார். இப்படிக்கு தற்போதைக்கு திருந்திய ப்ளூ சட்டை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து ப்ளாப் படங்களை கொடுத்துவரும் விஜய் ஆண்டனி, தன்னுடைய படங்கள் ஓடாததால் தற்போது விமர்சகர்களை பிராண்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சக்சஸ் மீட் வையுங்கள், தமாஷாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியை விட்டு வைக்காமல் தொடர்ந்து அடுத்தடுத்த ட்வீட்களால் கலாய்த்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











