Blue sattai maaran: அக்ஷய் குமார் பரிதாபங்கள்.. பாலிவுட்டையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2020ம் ஆண்டில் ஓடிடியில் நேரடியாக வெளியான படம் சூரரை போற்று. இந்த படத்தில் சூர்யா -அபர்ணாவுடன் கருணாஸ், ஊர்வசி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். கேரக்டர் தேர்வு படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது.

சூரரை போற்று படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்ததுடன் தேசிய விருதுகளையும் ஐந்து பிரிவுகளின் கீழ் கைப்பற்றியது. விமானி கோபிநாத்தின் சொந்த விமான நிறுவனம் குறித்த முயற்சியை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருந்தது. இந்நிலையில் பாலிவுட்டில் சுதா கொங்கரா இயக்கத்திலேயே சூர்யா தயாரிப்பில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்ஷய் குமார், ராதிகா மதன் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த சர்ஃபிரா படம் கடந்த 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

Suriya Akshay kumar Blue sattai maaran tamil cinema

சூரரை போற்று படம்: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணியில் கடந்த 2020ம் ஆண்டில் ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து தேசிய விருதுகளையும் அள்ளியது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த படத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், வடிவுக்கரசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்திற்கு சூர்யா தன்னுடைய அழுத்தமான நடிப்பின் மூலம் வெயிட்டை ஏற்றியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தை பாலிவுட்டிலும் சூர்யா தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து ரிலீஸ் செய்துள்ளார்.

சர்ஃபிரா படம்: பாலிவுட்டிலும் சுதா கொங்கராவே இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் நடிகர் அக்ஷய்குமார், ராதிகா மதன் உள்ளிட்டவர்கள் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். சர்ஃபிரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கு போட்டியாக சர்ஃபிரா படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. சூரரை போற்று படத்தில் சூர்யாவின் அழுத்தமான நடிப்பை போல சர்ஃபிரா படத்தில் அக்ஷய் குமார் உள்ளிட்ட யாரும் வெளிப்படுத்தவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அக்ஷய் குமார் பரிதாபங்கள்: சூரரைப்ோற்று படத்தில் சூர்யா மற்றும் அபர்ணா முரளியின் காதல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்தது. அதேபோல பாலிவுட்டில் அக்ஷய் குமார் மற்றும் ராதிகா மதன் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்ய தவறியுள்ளனர். இந்நிலையில் இயக்குனரும் சினிமா விமர்சகர்மான ப்ளூ சட்டை மாறன், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சர்ஃபிரா படத்தை கலாய்த்துள்ளார். அக்ஷய்குமார் பரிதாபங்கள் என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் சர்ஃபிரா படத்தின் ஒரு டிக்கெட் வாங்கினால் இரண்டு சமோசா மற்றும் ஒரு டீ இலவசம் என்று அந்த படக்குழு அறிவித்துள்ள அறிவிப்பை போஸ்டராக தனது எக்ஸ்பிரஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டிக்கெட்டுடன் டீ & சமோசா?: ஓடிடியில் வெளியான நிலையிலும் சூர்யாவின் சூரரைப் போற்று படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. படத்தில் சொந்தமாக விமான நிறுவனம் துவங்கும் ஹீரோவின் கனவு மற்றும் அதற்காக எந்த அளவிற்கு அவர் பாடுபடுகிறார் என்ற விஷயங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. அந்த அளவிலான கதைக்களத்தை இந்த அளவில் டீ மற்றும் சமோசாவுடன் விற்பனை செய்யும் அவலத்தை ப்ளூ சட்டை மாறன் தனது இந்த பதிவின்மூலம் சுட்டிக் காட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X