Actor Rajinikanth: அம்பானி திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரஜினி.. விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்!
மும்பை: அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரியில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டிற்கு இடையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் மார்ச் மாதம் முதலே திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வந்தன.
இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் பங்கேற்ற ரஜினிகாந்த் டான்ஸ் ஆடி கொண்டாடியதை பார்க்க முடிந்தது. அவர் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், மருமகன் மற்றும் பேரன் என குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

நடிகர் ரஜினிகாந்த்: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபர் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணம் மும்பையில் தொடர்ந்து பல வாரங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், மார்ச் மாதம் முதலே திருமண கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சங்கீத், மெகந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிலையில், நேற்றைய தினம் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அளவில் உள்ள பிரபல நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருமண நிகழ்ச்சியில் ரஜினி ஆட்டம்: இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரனுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்திருந்தார். பாரம்பரியமான வெள்ளை நிற குர்தா மற்றும் வேட்டியில் அவர் காணப்பட்டார். முன்னதாக ரெட் கார்ப்பெட்டில் தன்னுடைய குடும்பத்தினருடன் இணைந்து அவர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இதையடுத்து காலன் குடியான் என்ற பாலிவுட் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்று டான்ஸ் ஆடினார். இதையடுத்து உடனிருந்த அனில் கபூர் உள்ளிட்டவர்களும் இணைந்து ஆட்டம் போட்டனர்.
விருந்தினர்கள் உற்சாகம்: இந்த நடனம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் அனில் கபூருடன் ரன்வீர் சிங், மணமகன் ஆனந்த் அம்பானி ஆகியோரும் இணைந்து நடனம் ஆடியது விருந்தினர்களை உற்சாகப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் இதுபோன்று பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன் சைலன்டாக சென்று விடுவார். ஆனால் அம்பானி வீட்டின் திருமணத்தில் அவர் ஆட்டம் போட்டதை பார்த்து ரசிகர்கள் பாராட்டியும் விமர்சித்தும் வருகின்றனர்.
கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: 70 வயதை கடந்த நிலையில் ரஜினியின் எனர்ஜி அனைத்து தரப்பினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் இந்த வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு 'அடடா' என்று ரஜினியின் நடனத்தை விமர்சித்துள்ளார்,


Click it and Unblock the Notifications











