Vijay: தயவு செஞ்சு விஜய்யோட ஹேர் ஸ்டைலிஸ்ட்டை மாத்துங்க.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் விஜய் தனது லியோ படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் லியோ கேரக்டரின் போஸ்டர்கள், வீடியோக்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் -விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தில் இணைந்துள்ளனர். படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகயுள்ளது.

Director Blue sattai Maran advices to change the Hair Stylist of Vijay

லியோ படத்தில் விஜய்யின் ஹேர்ஸ்டைலை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை கொண்டு லியோ படத்தில் களமிறங்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது அதே கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கும் சிறப்பான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, தலக்கோணம் போன்ற இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் சூட்டிங் காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு, 52 நாட்கள் கடுமையான குளிர், நிலநடுக்கம் இவற்றினிடையே நடந்து முடிந்தது. முன்னதாக இந்தப் படத்தில் இந்த ஷெட்யூல் கொடைக்கானலில்தான் திட்டமிடப்பட்டதாகவும் பின்பு காட்சிகளை மேலும் சிறப்பாக்கும் வகையில் காஷ்மீரில் நடத்தப்பட்டதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பிறந்தநாளையொட்டி வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் போஸ்டர்கள் மாஸ் காட்டின. ரசிகர்களை தொடர்ந்து வசீகரிக்கும் வகையில் அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் பிறந்தநாட்களையொட்டி கிளிம்ப்ஸ் வீடியோக்களும் வெளியாகின.

Director Blue sattai Maran advices to change the Hair Stylist of Vijay

இந்நிலையில் படத்தில் லியோ கேரக்டரில் விஜய்யின் ஹேர்ஸ்டைல் வித்தியாசமாக காணப்பட்டது. பார்த்திபன் கேரக்டரில் வழக்கமான விஜய்யின் ஹேர்ஸ்டைல் இருந்த நிலையில், லியோ கேரக்டரில் ஸ்ட்ரெயிட் ஹேருடன் காணப்பட்டார் விஜய். விஜய்யின் காஷ்மீர் சூட்டிங்கின் வீடியோக்கள் வெளியான நிலையில், அந்த வீடியோக்களில் இந்த ஹேர்ஸ்டைலுடன்தான் விஜய் காணப்பட்டார். இந்நிலையில் இந்த ஹேர்ஸ்டைல் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஜய்யின் இந்த ஹேர்ஸ்டைல் குறித்து சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். விஜய்யின் லியோ கெட்டப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், சிகையலங்கார நிபுணரை தயவு செஞ்சி மாத்துங்க என்று தெரிவித்துள்ளார். எப்போதுமே தன்னுடைய லுக்கில் அதிகமான கவனம் செலுத்துவார் விஜய். அடுத்ததாக உருவாகவுள்ள தளபதி 68 படத்திற்காக லாஸ் ஏஞ்சல்சில் அவர் லுக் டெஸ்ட் எடுத்துள்ளார்.

தளபதி 68 படத்தில் அப்பா, பையன் கேரக்டருக்காக இந்த லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லியோ படத்தில் பார்த்திபன் கேரக்டர் சிறப்பாக அமைந்த நிலையில், அதிலிருந்து வித்தியாசம் காட்டும்வகையில் லியோ கேரக்டர் கெட்டப் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கியமான கேரக்டராக அமைக்கப்பட்டுள்ள லியோ படத்தின் ஹேர்ஸ்டைல் சிறப்பாக அமையவில்லை என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X