Blue sattai Maran: நான் உன்னை விட்டாத்தானடா.. இமான் விவகாரத்தில் ப்ளூ சட்டை மாறன் உறுதி!
சென்னை: இசையமைப்பாளர் டி இமான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் குறித்த சில உண்மைகளை வெளிப்படுத்தினார்.
சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து இனிமேல் பணியாற்ற மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

டி இமானின் இந்த பேட்டி குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பல்வேறு கமெண்ட்களை செய்து வருகிறார்.
இசையமைப்பாளர் டி இமான்: இசையமைப்பாளர் டி இமான் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இந்த விவகாரம் ரசிகர்களிடையே மிகவும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் குறித்து மறைமுகமாக பேசியிருந்தார்.
சிவகார்த்திகேயன் துரோகம்?: சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்தை மறக்க முடியாது என்றும் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை வெளிப்படையாக பேச முடியாது என்றும் டி இமான் பேசியுள்ளார். மேலும் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தான் வேலை செய்ய மாட்டேன் என்றும் டி இமான் கூறியுள்ளார். மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் -டி இமான் கூட்டணி துவங்கியது.
டி இமான் இன்டர்வியூ: தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, எங்க வீட்டு பிள்ளை என இவர்கள் காம்பினேஷன் தொடர்ந்தது. இது மட்டும் இல்லாமல் டி இமான் இசையில்தான் சிவகார்த்திகேயன் முதன்முதலில் பாடகராகவும் செயல்பட்டார். இந்நிலையில்தான் இந்த ஜென்மத்தில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வேலை செய்ய மாட்டேன் என்று டி இமான் கூறியுள்ளார். பல விஷயங்களை மூடி மறைத்துதான் ஆக வேண்டும் என்றும் டி இமான் தன்னுடைய வேதனையை பகிர்ந்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் இவர்களின் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்தார் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன். சிவகார்த்திகேயனை CSK என்று குறிப்பிட்டு அதற்கு விளக்கமாக Cringe Sivakarthikeyan என்றும் விளக்கம் அளித்திருந்தார். சிவகார்த்திகேயனின் செயல் குறித்த வாக்கெடுப்பையெல்லாம் நடத்தினார். மேலும் வடிவேலு பட கள்ளக்காதல் காமெடி போன்றவற்றின் போஸ்டர்களை எல்லாம் பகிர்ந்து வந்தார்.
வடிவேலு காமெடி: இந்நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும் வடிவேலு காமெடியை கையிலெடுத்துள்ளார். வடிவேலு காமெடியை மாற்றி CSK கூறுவது போல, என்னோட பஞ்சாயத்தை மறந்துட்டு, எல்லாம் லியோ பாரு, வேர்ல்ட் கப் பாரு, ஆயுத பூஜை கொண்டாடு போ.. போ என்று கொடுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து, எவன் மறந்தாலும்.. நான் உன்னை விட்டாத்தானடா.. என்றும் சவால் விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











