Blue Sattai Maran: இன்னும் மிஷின் நிக்கலை.. 600 கோடி ஜெயிலர் வசூலை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர். அண்ணாத்த படம் ஏற்படுத்திய கலவையான விமர்சனங்களில் இருந்து வெளியில் வரும் ரஜினியின் முயற்சிக்கு இந்தப் படம் சிறப்பாக கைகொடுத்தது.

இதேபோல விஜய்யின் பீஸ்ட் படம் கொடுத்த தோல்வியில் இருந்து மீள அடுத்ததாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கும் ஜெயிலர் படம் சிறப்பாக அமைந்துள்ளது.

Director Blue sattai Maran comments Rajinikanths Jailer movie collections

ஜெயிலர் பட 600 கோடி வசூலை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், மிர்ணா என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில், இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலிலும் விமர்சனங்களிலும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக மாஸ் காட்டியிருந்தார் ரஜினி.

இந்தப் படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார். படத்தில் சிவராஜ்குமார், விநாயகன் உள்ளிட்டவர்களின் நடிப்பும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. இதேபோல படத்தின் வெற்றியில் முக்கியமான பங்கு பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். அவரது படத்தில் படத்தின் அனைத்து பாடல்களும் அதிகமான கவனத்தை பெற்றது-

குறிப்பாக தமன்னாவின் அதிரடி ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது- சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்தப் பாடல் அதிகமான ரீல்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது. மேலும் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை தாண்டி அதிரடி சரவெடியாக அமைந்தது. இந்தப் படம் தற்போது இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் சிறப்பான கலெக்ஷனை பெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு போட்டியாக முன்னணி நடிகர்களின் படங்களும் இல்லாத நிலையில், தனிக்காட்டு ராஜாவாக மாஸ் காட்டி வருகிறது ஜெயிலர்.

Director Blue sattai Maran comments Rajinikanths Jailer movie collections

இந்நிலையில் இந்தப் படத்தின் கலெக்ஷன் தற்போது 600 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் வசூல் 500 கோடி ரூபாய்களை கடந்ததாக தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் 600 கோடி ரூபாய் கிளப்பில் பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் சேப்டர் 2, 2 பாயிண்ட் ஓ, பாகுபலி படங்களுடன் இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட பல விஷயங்களை தொடர்ந்து விமர்த்து வரும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்த வசூல் குறித்தும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார். இதுகுறித்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போஸ்டராக வெளியிட்டுள்ள அவர், மிஷின் இன்னும் நிற்கவில்லை என்று கலாய்த்துள்ளார். தொடர்ந்து ஜெயிலர் படத்தின் வசூல் குறித்து பொய்யான தகவல்கள் வெளியாகி வருவதாக அவர் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X