Superstar title: சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை.. விஜய்யை மீம்ஸ் போட்டு கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர். தலைவர் என்றும் அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி 70 வயதை தாண்டிய நிலையிலும் தன்னுடைய சூப்பர்ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும்வகையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக அவரது ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

Director Blue sattai maran criticise about Superstar title controversy

சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை குறித்து மீம்ஸ் வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்: கடந்த சில மாதங்களாகவே சூப்பர்ஸ்டார் டைட்டில் சர்ச்சை தமிழ் சினிமாவில் தலைதூக்கி வருகிறது. வாரிசு பட விழாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான் என சிலர் பேசியதை தொடர்ந்து இந்த சர்ச்சை அதிகமானது. படம் வெளியாகி சில மாதங்களை கடந்த நிலையிலும் தற்போதுவரை அந்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இதனிடையே இந்த போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். அவரது மாவீரன் படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் இந்த பேச்சு எழுந்தது.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஹுகும் பாடலில் வரும் சூப்பர்ஸ்டார் என்ற வரிகளை தான் நீக்கும்படி கூறியதாகவும், இந்த பட்டம் எப்போதும் தொல்லை தான் என்றும் பேசியிருந்தார். பல வருடங்களுக்கு முன்பே தான் இந்த பட்டத்தை நீக்க சொன்னதாகவும், ஆனால் தான் பயந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்ததாகவும் ரஜினி மேலும் கூறினார்.

காக்கா, கழுகை வைத்து குட்டிக் கதையையும் சொன்ன ரஜினிகாந்த், குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை, இது இரண்டும் இல்லாத ஊரும் இல்லை, நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டு நாம் போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு தமிழின் பிரபல நடிகராக வலம்வந்துக் கொண்டிருக்கும் விஜய்யை குறிப்பிடுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

Director Blue sattai maran criticise about Superstar title controversy

ரஜினி இதுபோன்ற பேச்சை தவிர்த்திருக்க வேண்டும் என்று ரசிகர்களும் விமர்சித்தனர். தன்னுடைய தகுதியை குறைத்துக் கொண்டு அவர் சக நடிகரை விமர்சிக்கும் வகையில் இப்படி பேசியுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நடிகர் விஜய்யை கலாய்த்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் போட்டுள்ளார். பிரபல கவுண்டமணி -செந்தில் காமெடியை வைத்து அவர் கலாய்த்துள்ளார்.

கவுண்டமணி -செந்தில் இடம்பெற்றுள்ள இந்த காமெடி கிளிப்பிங்கில், கவுண்டமணியிடம் இருந்து இளநீர்களை செந்தில் மறைத்து, வடிவேலுவிடம் திருடிக் கொடுப்பார். இந்த பிரபல காமெடியில், கவுண்டமணியிடம் இருந்து இளநீரை செந்தில் திருடி, வடிவேலுவுக்கு கொடுப்பது போல, ரஜினியிடம் இருந்து சூப்பர்ஸ்டார் டைட்டிலை மக்கள் திருடி விஜய்யிடம் கொடுப்பதாக ப்ளூ சட்டை மாறன் மீம்ஸ் அமைந்துள்ளது. மேலும் இந்த தலைவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்றும் அவர் வீடியோ மீம்ஸ் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X