Blue sattai Maran: நடிகர் சங்க கட்டிடம்.. ஆவேசப்பட்ட செந்தில்.. பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: வங்கிக்கடன் பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில் அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால் இதனை கூறியுள்ளார்.
நடிகர் சங்க கட்டிடத்தை தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் ஆவேசப்பட்ட செந்திலுக்கு ப்ளூ சட்டை மாறன் பாராட்டு: தெனிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தையடுத்து தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி உள்ளிட்டவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இரண்டாவது முறையாக தங்களை தேர்வு செய்ய தங்கள் மீதான நம்பிக்கைதான் காரணம் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்க தேர்தலையடுத்து கொரோனா உள்ளிட்ட பாதிப்புகள் வந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதனால் கட்டிடத்தின் கம்பிகள் துருப்பிடித்துள்ளதாக குறிப்பிட்ட விஷால், இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விரைவில் வங்கிக்கடன் பெற்று நடிகர் சங்க கட்டிட பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். தாங்கள் பொறுப்பேற்ற பின்பு, நடிகர் சங்க கட்டிடம் தவிர்த்த மற்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்தப் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் புதிய கட்டிடத்தில்தான் நடக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
நடிகர் சங்கத்திற்கான இடத்தை மீட்டதே பெரிய விஷயமாக கருதுவதாகவும் தேர்தல் நடப்பதற்கு முன்னால் இன்னும் 5 மாத கால அவகாசம் கொடுத்திருந்தால் கட்டிடத்தை தாங்கள் கட்டி முடித்திருப்போம் என்றும் அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த புதிய கட்டிடம் அமையவுள்ளதால்தான் இத்தனை இடையூறுகள் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தில் நிதி இல்லையென்ற போதிலும் நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீமன், பூச்சி முருகன், நாசர் உள்ளிட்டவர்கள் தங்களது சொந்த பணத்தில் நடிகர்களுக்கான மருத்துவ முகாமை நடத்தி வருவதாகவும் தனிப்பட்ட முறையில் நடிகர்களிடம் பணம் பெற்று நடிகர்களுக்கு மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாகவும் விஷால் கூறியுள்ளார். இந்நிலையில் வங்கிக்கடன் பெற்று நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது குறித்த விஷாலின் பேச்சு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

நடிகர் சங்க பொதுக்குழுவிற்கு வந்த நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோடி கோடியாக ஊதியம் வாங்குகிறீர்களே, நடிகர் சங்க கட்டிடம் கட்ட முடியாதா என்று அனைத்து ஹீரோக்களையும் பார்த்து கேள்வி எழுப்புமாறு செந்தில் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் செந்திலின் இந்த துணிச்சலான கேள்விக்கு இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கலை நிகழ்ச்சி, ஸ்டார் கிரிக்கெட் என டிக்கெட் போட்டு வசூலித்தது போதும் என்று கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், கோடீஸ்வர நடிகர்கள் சங்கத்திற்கு பணம் தர வேண்டுமென்று கேளுங்கள், அவர்கள் எவ்வளவு தருகிறார்கள் என்று பார்ப்போம் என்றும் கூறியுள்ளார். சங்கத்தின் கட்டடம் கட்ட தேவையான 40 கோடி ரூபாயை டாப் 10 நடிகர்களே தந்துவிட இயலும் என்றும் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் எத்தனை வருடத்திற்கு இதை தொடர உத்தேசம் என்றும் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











