Vijayakanth: எம்ஜிஆரும் விஜயகாந்தும்.. விவேக் வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: இன்றைய தினம் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Director Blue sattai Maran hails Captain Vijayakanth on his birthday

இந்நிலையில் விவேக்கின் வீடியோவை பகிர்ந்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் விஜயகாந்தின் உணவளிக்கும் வழக்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்தின் உணவு உபசரிப்பை பாராட்டிய மறைந்த நடிகர் விவேக்: நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மிகச்சிறப்பான நடிகராக தன்னுடைய படங்கள்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது ஆக்ஷன் படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட்டாக தற்போதும் மாஸ் காட்டி வருகின்றன. இவரது ரமணா உள்ளிட்ட படங்கள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை தொடர்ந்து பார்க்கத் தூண்டுபவையாக உள்ளன.

இன்றைய தினம் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தன்னுடைய 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி ரசிகர்கள், தொண்டர்கள், சக நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் தேமுதிக அலுவலகத்திலும் ரசிகர்கள், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு சுட சுட பிரியாணி பரிமாறப்பட்டது.

முன்னதாக ரசிகர்கள், தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்தார். விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், அவரது வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார். விஜயகாந்த் அசல் பருந்து என்றும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

Director Blue sattai Maran hails Captain Vijayakanth on his birthday

இந்நிலையில் விஜயகாந்தின் உணவு உபசாரத்தையொட்டி மறைந்த நடிகர் விவேக் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் எம்ஜிஆர் வீட்டிற்கு போனால் சாப்பிடாமல் திரும்ப வாய்ப்பில்லை என்று பாராட்டு கூறும் விவேக், அதேபோல அடுத்ததாக விஜயகாந்த் அலுவலகத்தில்தான் தான் அந்த நடைமுறையை பார்த்ததாக தெரிவித்துள்ளார். இந்த அலுவலகத்தில் யார் யாரோ வருவதை தானே பார்த்துள்ளதாகவும் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்

நடிப்பதற்காக சென்னை வந்தவர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் வருவார்கள் என்றும் விவேக் கூறுகிறார். மேலும் தான் பணியாற்றும் யூனிட்டிலும் தான் சாப்பிடும் அதே உணவை மற்றவர்களுக்கும் வழங்குவார் என்றும் விவேக் தெரிவித்துள்ளார். இது எம்ஜிஆர் பாலிசி என்றும் அதை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வருபவர் விஜயகாந்த் என்றும் தன்னுடைய வீடியோவில் விவேக் கூறுகிறார். இந்த வீடியோவை பகிர்ந்து விஜயகாந்தின் உணவு உபசரிப்பு குறித்து பாராட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X