Blue Sattai: விஜய்யை பார்த்து பீதி.. ரஜினியை தொடர்ந்து சன் டிவியையும் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அவரது ஜெயிலர் படம் கடந்த மாதத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது.
ரஜினியின் படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களை கடந்து வசூல் சாதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து இந்த வசூல் நிலவரத்தை மறுத்து வருகிறார். ரஜினி குறித்த நெகட்டிவ் விமர்சனங்களை அவர் தொடர்ந்து தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

ரஜினியுடன் சன் பிக்சர்சையும் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் கடந்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்து வருகிறது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. தொடர்ந்து இந்தப் படத்தின் வசூலில் ரஜினி, இயக்குநர் நெல்சனுக்கும் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் விலையுயர்ந்த காரும் பரிசளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் இந்தப் படத்திற்காக ஆசைப்பட்டாலும் காக்கா, பருந்தாக முடியாது என்று ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது, ரஜினி குட்டிக்கதையுடன் சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர் மறைமுகமாக நடிகர் விஜய்யை குறிப்பிடுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் ரசிகர்கள், ஜெயிலர் படத்தை புறக்கணிப்பதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இதனால் தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் மிகுந்த உற்சாகமடைந்துள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ், வசூல் சாதனை உள்ளிட்டவற்றை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகிறார் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்.
இந்நிலையில் தற்போது அவர் தனது புதிய ட்வீட்டிலும் இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ளார். ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது ஷாருக்கான், அட்லீ, பிரியா மணி உள்ளிட்டவர்கள் விஜய் குறித்து பேசியவற்றை தொகுப்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து நேற்றைய தினம் சன் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்வில் விஜய் குறித்த அட்லீயின் பேச்சு கட் செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜோசப் என்ற முன்பெயர் மட்டுமில்லாமல் விஜய்யின் அரசியல் பிரவேச அறிகுறிகளும் சிலருக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவரது நம்பர் 1 வியாபார மற்றும் வசூல் சக்ரவர்த்தி என்ற உண்மையும் வேறு தரப்பினருக்கு பேதியை உண்டாக்கியுள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் தனது பதிவில் கூறியுள்ளார். பட்டத்தை பறிப்பதாக சூப் ஸ்டார், தனது படத்தின் நிகழ்ச்சியில் அலறித்துடித்த நிலையில், இதுகுறித்து இதுவரை விஜய் வாய்திறக்கவில்லை என்றும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
விஜய் உள்ளிட்ட யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் ப்ளூ சட்டை மாறன், இந்த பதிவை மேற்கொண்டாலும் அவர் பதிவிட்டுள்ள போஸ்டரில் விஜய் குறித்தே இந்த போஸ்ரை அவர் வெளியிட்டுள்ளது தெரியவருகிறது. அட்லீயின் விஜய் குறித்த பேச்சுக்கள் கட் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கரகாட்ட கோஷ்டியின் அவரை பார்த்து பீதியாகியுள்ளது தெரியவருவதாகவும் மிக்க மகிழ்ச்சி என்றும் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications