Blue sattai Maran: துரோகத்திற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.. ப்ளூ சட்டை மாறன் உறுதி!

சென்னை: இமான் விவகாரம் குறித்து தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை மேற்கொண்டு வருகிறார் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து அடுத்தடுத்த புகார்களை வெளிப்படுத்தினார் இசையமைப்பாளர் இமான்.

Director Blue sattai Maran on Imman & Sivakarthikeyan issue

இந்த விவகாரம் கோலிவுட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் வைத்து வருகிறார்.

இமான் -சிவகார்த்திகேயன் விவகாரம்: இசையமைப்பாளர் இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணி பல படங்களில் மிகச்சிறப்பாக அமைந்தது. மனம் கொத்திப் பறவை படத்தில் துவங்கிய இவர்களது கூட்டணி தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எங்க வீட்டு பிள்ளை என அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்தது. இந்தக் கூட்டணி மிகப்பெரிய அளவில் ஹிட் பாடல்களை கொடுத்தது. இதனிடையே கடந்த சில படங்களில் இவர்களது கூட்டணியை பார்க்க முடியவில்லை.

இமான் பேட்டி: இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இமான் கொடுத்திருந்த பேட்டியொன்றில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும் இந்த ஜென்மத்தில் தாங்கள் இருவரும் சேர வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார். தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை தான் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ப்ளூ சட்டை மாறன் பதிவு: இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் மௌனம் சாதித்து வரும் நிலையில், இமானின் முன்னாள் மனைவி, சிவகார்த்திகேயன் மிகச்சிறந்த நண்பர் என்றும் அவர் இமானுடனான பிரிவை தடுக்க முயன்றது இமானுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்து வருகிறார் சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன்.

துரோகத்திற்கான பலன்: லியோ பட ரிலீஸ், உலகக்கோப்பை போட்டிகள், ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் என அடுத்தடுத்த நிகழ்வுகளில் மக்கள் இந்த விவகாரத்தை மறந்தாலும் தான் தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளை மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆர், நம்பியாரை சாட்டையால் அடிக்கும் காட்சியை வெளியிட்டு, செய்த துரோகத்திற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஓட முடியாது: மேலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்றும் கூறியுள்ளார். தன்னுடைய நம்ம வீட்டு பிள்ளை இமேஜை காப்பாற்றிக் கொள்ள பல கோடி ரூபாய்களை செலவழித்து சில மீடியாக்களின் வாயை அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சோஷியல் மீடியாவிலும் தன்னுடைய ஐடி டீம் மூலம் இந்த சேதாரத்தை சரி செய்ய கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் எதிர்தரப்பு மட்டும் யோக்கியமா என்று அடுத்தடுத்த பேட்டிகளை அல்லக்கைகள் மூலம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இமானுக்கு கைக்கொடுக்க கோரிக்கை: எத்தனை கோடி கொடுத்தாலும் சிலரை விலைக்கு வாங்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், செய்த துரோகத்திற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவிற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்தவண்ணம் உள்ளது. இமானுக்கு இந்த நேரத்தில் கைக்கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X