Blue Sattai Maran: மக்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைக்க காரணம் என்ன.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் ஆன்லைன் புக்கிங்குகள் ஒருபுறம் சிறப்பாக நடந்து வந்தாலும் திரையரங்குகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் புக்கிங்கை செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல திரையரங்குகளில் ரசிகர்கள் வெயில், மழை பாராமல் நீண்ட வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் புக்கிங் செய்வதை குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை குறித்து கேள்வி எழுப்பிய ப்ளூ சட்டை மாறன்: நடிகர் விஜய்யின் லியோ படம் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் டிக்கெட் விற்பனை ஆன்லைனிலும் திரையரங்குகளிலும் விற்கப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களிலும் இந்தப் படத்தின் டிக்கெட் விற்பனை ஜரூராக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் இந்தப் படத்தின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை 2500 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்யின் மாஸ் படமாக உருவாகியுள்ளது லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்துள்ளார் விஜய். லோகேஷின் கடந்த படம் விக்ரம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்துள்ளது. இதுவும் லியோ படத்தின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் விஜய். பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கேரக்டர்களில் அவர் இந்தப் படத்தில் காணப்படுகிறார்.

லியோ படத்தின் வீடியோக்கள், கிளிம்ப்ஸ், ட்ரெயிலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், மறுபுறம் லோகேஷ், அனிருத் உள்ளிட்டவர்களும் படத்தின் ப்ரமோஷன்களில் மிகச்சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக லோகேஷின் அடுத்தடுத்த பேட்டிகள், படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் சிறப்பாக களைகட்டி வருகின்றன.
படத்தின் ரிலீசுக்கு 6 வாரங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் லண்டன் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், மிகப்பெரிய வரவேற்புடன் ரசிகர்கள் புக்கிங்குகளில் ஈடுபட்டனர். இதேபோல சர்வதேச அளவில் இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங்குகள் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. ஆன்லைனில் மட்டுமில்லாமல் திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள், நீண்ட வரிசைகளில் நின்று டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

இதனிடையே கோவை பிராட்வே சினிமாஸில் ரசிகர்கள் இதுபோல நீண்ட வரிசைகளில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி வருவதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மற்றும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், பட ரிலீசுக்கு முன்னதாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்காமல், ரசிகர்களை நீண்ட வரிசையில் காத்திருக்க வைத்து கவுண்டரில் டிக்கெட் வழங்க வேண்டிய காரணமென்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். படம் வெளியாக நாட்கள் இருந்த போதிலும் இப்படி செய்வது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள ரசிகர்கள், இப்படி செய்தால் தானே ப்ளாக்கில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்க முடியும் என்று கமெண்ட் செய்துள்ளனர். ஆன்லைனில் அதிக விலைக்கு விற்றால் மாட்டிக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











