Blue Sattai: விமர்சனம் குறித்து சமுத்திரக்கனி.. கிழித்து தொங்க விடப்படும் என ப்ளூ சட்டை மாறன் பதிவு!

சென்னை: திரைத்துறையில் ஒவ்வொரு வாரமும் சிறிய பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில் படங்களின் வெளியீட்டிற்கு முன்னதாகவே படத்தின் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

Director Blue sattai Maran questions Samuthirakani statement on movie review

இதன்மூலம் ப்ரமோஷன்கள் இல்லாத படங்களுக்கும் பிரமோஷன்கள் கிடைத்து வருகின்றன. ஆனால், பெரிய பட்ஜெட் படங்களும் சொதப்பும் சூழல்களும் நடந்து வருகின்றன.

இயக்குநர் சமுத்திரக்கனியை கேள்வி கேட்ட ப்ளூ சட்டை மாறன்: சர்வதேச அளவில் தொழில்நுட்பம் கைகளில் உலகத்தை கொடுத்துள்ளது. சினிமாவிலும் பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சினிமா குறித்த விமர்சனங்களும் அதன் ப்ளஸ், மைனஸ்களும் உடனுக்குடன் ரசிகர்களின் பார்வைக்கு கிடைத்து விடுகின்றன. அந்த வகையில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகும் படங்களுக்கு சிறப்பான விமர்சனங்களும் பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்களுக்கு சுமாரான விமர்சனங்களும் கிடைக்கும் சூழல் உருவாகி வருகிறது.

இந்த விமர்சனங்களால், பல படங்கள் ப்ளாப் ஆகும் சூழுலும் ஏற்படுகிறது. முன்னணி நடிகர்களின் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் ரசிகர்களும் அதிகமாக உள்ளனர். இருந்தபோதிலும், விமர்சனங்களை பார்த்துவிட்டு, படத்தை புக் செய்யும் போக்கும் சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து முன்னணி நடிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது பிரபல இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனியும் இதுகுறித்து விமர்சித்துள்ளார்.

போன் யார் வைத்திருந்தாலும் ரிவ்யூ சொல்லலாம் என்று ஆகிவிட்டதாக அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 7 கோடி பேரும் ரிவ்யூ செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ள சமுத்திரக்கனி, ஆனால் தரமான படமாக இருந்தால் அது கண்டிப்பாக ஓடும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். போர் தொழில் போன்ற நிறைய எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் அதிகமான ப்ரமோஷன்கள் இல்லாமல் திரையரங்குகளில் வெளியான போர் தொழில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடித்திருந்தனர். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரிகளாக இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். குறைவான கேரக்டர்களை மட்டுமே லீட் கேரக்டர்களில் கொண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய த்ரில்லர் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. படமும் கொண்டாடப்பட்டது.

இதுகுறித்துதான் தற்போது சமுத்திரக்கனி பேசியுள்ளார். இதனிடையே, அவரது இந்தக் கருத்தை குறிப்பிட்டு இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். போர் தொழில் போன்ற சிறிய படங்களை கொண்டாடியதில், செல்போன் வைத்துள்ள சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ள அவர், வாய் இருக்குன்னு எதையாவது உளற வேண்டாம் என்றும் சமுத்திரக்கனிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Director Blue sattai Maran questions Samuthirakani statement on movie review

பணம் கொடுத்துதானே படத்தை பார்க்கிறார்கள் என்று கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், குறை இருந்தால் சுட்டிக் காட்டுவது நுகர்வோரின் உரிமை என்றும் கூறியுள்ளார். அதனால் சமுத்திரக்கனியின் நக்கல், வெங்காயமெல்லாம் வேலைக்கு ஆகாது என்றும் அவரது வேலையை உருப்படியாக பார்க்கும்படியும் கூறியுள்ளார். மொக்கைப் படங்கள் தொடர்ந்து விமர்சனங்களில் கிழித்து தொங்கவிடப்படும் என்றும் அவர் உறுதியாக பேசியுள்ளார்.

Director Blue sattai Maran questions Samuthirakani statement on movie review

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X