Blue sattai Maran: Poll result வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்.. லியோ படம் தான் டாப்!
சென்னை: இயக்குநர் மற்றும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ஜெயிலர் படத்திற்கு எதிரான விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
நேற்றைய தினம் இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் படம் குறித்த கருத்துக்கணிப்பில் ஜெயிலர் படத்தை தவிர்த்து பதிவிட்டிருந்தார்.

இதில் லியோ, ஜவான், சலார் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார்.
ப்ளாக்பஸ்டர் படம் குறித்த கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன்: ப்ளூ சட்டை மாறன் சினிமா விமர்சகராகவும் இயக்குநராகவும் உள்ளார். இவர் இயக்கிய ஆண்டி இந்தியன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. இந்நிலையில் தொடர்ந்து சினிமா குறித்த செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது அடுத்தடுத்த சினிமா செய்திகளை வெளியிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன், தொடர்ந்து ஜெயிலர் படம் குறித்த நெகட்டிவ்வான செய்திகளை வெளியிட்டு வருகிறார்.
ஜெயிலர் இசை வெளியீட்டின்போது காக்கா மற்றும் பருந்துக் கதையை ரஜினிகாந்த் சொன்னாலும் சொன்னார். தொடர்ந்து அதுகுறித்த பல மீம்ஸ்களை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றினார். தொடர்ந்து தான் ரசிகர்களிடம் இருந்து கொலை மிரட்டலை சந்தித்ததாகவும் பதிவிட்டார். ஆனாலும் அடுத்தடுத்த பதிவுகளை தொடர்ந்து வருகிறார். பருந்து குஞ்சுகள் என்று ரசிகர்களை தாக்கி பேசிவருகிறார்.
இந்நிலையில் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவலை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். வடை சுடுவதாக கமெண்ட் செய்து வருகிறார். உண்மையான நிலவரம் வேறு என்றும் அமெரிக்காவில் ரசிகர் ஒருவர், ஜெயிலர் படம் ரிலீசான தியேட்டரே காலியாக உள்ளதாக தெரிவித்ததாகவும் ட்வீட் செய்துள்ளார். இதனிடையே, வீக்எண்ட் வைப்ஸ் என்ற பெயரில், குடித்துவிட்டு ஒரு நபர் ரஜினி பாடலுக்கு ஆடிய ஆட்டத்தையும் பதிவிட்டுள்ளார்.
ஜெயிலர் படம் ஹிட் என சொன்னாலும் ஊர் நம்பும் ஆனால் துணிவு, வாரிசு, விக்ரம் மற்றும் கேஜிஎப் படங்களின் வாழ்நாள் கலெக்ஷனை இரண்டே நாட்களில் ஜெயிலர் தாண்டிவிட்டதாக பச்சை பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள் என்றும் இந்த உருட்டுக்கள் இத்துடன் நிற்காது தொடர்ந்து பாகுபலி, அவதார் படங்களின் வசூலை தாண்டிவிட்டதாக அள்ளி விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து வேடிக்கை பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் ஜெயிலர் படத்தை விட்டுவிட்டு, இந்த ஆண்டின் ப்ளாக்பஸ்டர் படம் எது என ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தார். இதில் லியோ, ஜவான், சலார், கேப்டன் மில்லர் என நான்கு படங்களை சேர்த்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் இந்த கருத்துக்கணிப்பின் ரிசல்ட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி விஜய்யின் லியோ படம் 76.2 சதவிகிதம் புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தடுத்த இடங்களில் ஜவான் 8.9 சதவிகிதமும், சலார் 8.6 சதவிகிதமும் கேப்டன் மில்லர் 6.3 சதவிகிதமும் வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் 23,780 பேர் தங்களது வாக்குகளை பதிவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் இந்த ஆண்டின் நம்பர் ஒன் பிளாக்பஸ்டர் படமாக அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ள விஜய்யின் லியோ படம் அமையும் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











