பள்ளத்தாக்குன்னா என்னங்க.. உருவ கேலி குறித்த சிம்பு அட்வைசுக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை : நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்தப் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடந்து முடிந்துள்ளது. படம் சிறப்பான வசூலை பெற்று வருகிறது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு அடுத்தடுத்த வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சிறப்பான இயக்குநர்களின் மேக்கிங்கில் இணைந்து அவர் சிறப்பான நடிப்பையும் கொடுத்து வருகிறார். முன்னதாக அவரது நடிப்பில் ஈஸ்வரன், மாநாடு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

 சிறப்பான வரவேற்பு

சிறப்பான வரவேற்பு

இந்தப் படங்கள் சிம்புவிற்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் 4 தினங்களுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படத்தின் வசூலும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்

வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்

இந்தப் படத்தின் மேக்கிங், கதையாடல் உள்ளிட்டவை சிறப்பாக அமைந்த நிலையில், சர்வதேச பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டை நேற்றைய தினம் படக்குழுவினர் நடத்தி முடித்துள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, இந்தப் படத்தின் வெற்றி தனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 நம்பிக்கையை கொடுத்த விமர்சனங்கள்

நம்பிக்கையை கொடுத்த விமர்சனங்கள்

இந்தப் படத்தின் விமர்சனங்கள் மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும் இது கேங்ஸ்டர் படமில்லை என்றும் ஒரு இளைஞன் கேங்ஸ்டராக மாறுவது குறித்த கதை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தின் இரண்டாவது பாகம் கேங்ஸ்டர் கதைக்களமாக வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உருவ கேலி வேண்டாம்

உருவ கேலி வேண்டாம்

மேலும் தன்னுடைய உடலை வைத்து அதிகமான பாடி ஷேமிங்குகளை செய்ததாகவும், ஆனால் அதுபோன்று நடந்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மறைமுகமாக ப்ளூ சட்டை மாறனுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் சிம்புவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ப்ளூ சட்டை மாறன் பதிலடி

ப்ளூ சட்டை மாறன் பதிலடி

கடந்த 2004ல் வெளியான குத்து என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு பாடலில் ஆடியிருப்பார் சிம்பு. அதில் பாஞ்சிடாம மெல்லத் தாக்கு, பாவம் சின்ன பள்ளத்தாக்கு என்று வரிகள் வரும். ஒரு பெண்ணின் உடல் குறித்த கேவலமான வரிகளுடன் கூடிய பாடலில் குத்து படத்தில் சிம்பு நடித்திருந்தார்.

பள்ளத்தாக்குன்னா என்னங்க?

பள்ளத்தாக்குன்னா என்னங்க?

இந்தப் பாடலில் வரும் பள்ளத்தாக்கு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்ற சிம்புவை கேட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், இந்தப் பாடலுக்கு பாடலாசிரியரை மட்டும் குற்றம் சாட்டி தப்பிக்க நினைக்காதீர்கள் என்றும் சிம்புவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். சிம்புவும் சர்ச்சையும் கூடவே பிறந்தவர்கள் என்ற நிலையிலிருந்து சிம்பு எப்போதுதான் தப்புவாரோ தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X