லோகேஷிடம் வாரிசு இயக்குநர் வம்சி கற்க வேண்டிய பாடம்.. வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை இயக்கியுள்ளார் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 210 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக தயாரிப்புத் தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது வாரிசு படம். இந்தப் படம் அஜித்தின் துணிவு படத்துடன் இணைந்து ரிலீசானது. 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசானது.

அதிகமான வாரிசு படத்தின் நீளம்
பேமிலி சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள வாரிசு படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் நீளம் ஏறக்குறைய 3 மணிநேரங்களாக உள்ள நிலையில், படத்தில் ஏராளமான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இதை சமீபத்திய பேட்டியில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தெரிவித்துள்ளார்.

நீக்கப்பட்ட குஷ்பூ காட்சிகள்
முதல் பாதியில் நடிகை குஷ்பூ இடம்பெற்றுள்ள 17 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் பிரகாஷ்ராஜ் -சரத்குமார் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும் வம்சி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார்.

லோகேஷுடன் இணைந்த விஜய்
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷுடன் விஜய் இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் த்ரிஷா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை எளிமையாக போடப்பட்டு டெஸ்ட் சூட் நடத்தப்பட்டது.

கோடிகளில் சம்பளம்
இதனிடையே இன்னும் சில தினங்களில் படத்தின் அப்டேட்டை வெளியிடவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது சமீபத்திய பேட்டியில், திரைத்துறையில் இருப்பவர்கள் தங்களது கடினமான உழைப்பிற்கு கோடிகளில் சம்பளம் வாங்குவதை சுட்டிக் காட்டியுள்ளார்.

மக்களின் பணத்திற்கு மதிப்பு
தொடர்ந்து பேசியுள்ள லோகேஷ், 2000 ரூபாய் சம்பாதிக்கும் நபர், சினிமாவை பார்ப்பதற்காக 200 ரூபாய் எடுத்து வைக்க வேண்டியுள்ளதாகவும், அந்தப் பணத்திற்கு மதிப்பு கொடுக்கும்வகையில் நம்முடைய படைப்பு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

லோகேஷிடம் வம்சி கற்க வேண்டிய பாடம்
இதனிடையே, லோகேஷின் இந்த பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ள விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், லோகேஷிடம் இருந்து இந்தப் பாடத்தை வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி கற்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார். வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











