எனக்கு பைக் விபத்து நடந்தால் கௌதம் கணக்கில்தான் எழுத வேண்டும்.. ப்ளூ சட்டை மாறன் நேரடி தாக்குதல்!

சென்னை :நடிகர் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம்.

இந்தப்படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி கடந்த வாரத்தில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம். மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படத்தில் ஒரு சாமானிய இளைஞர் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறான். அதற்கான சூழ்நிலைகள் என்ன என்பதை கதைக்களமாக காட்டியிருந்தார் கௌதம் மேனன். சிம்பு -கௌதம் கூட்டணியில் முன்னதாக வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் இருந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தப் படம் இவர்களின் ஹாட்ரிக் வெற்றியாக தற்போது அமைந்துள்ளது.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாக படத்தின் பிரமோஷனின்போது கௌதம் மேனன் தெரிவித்த நிலையில், விரைவில் படத்தின் இரண்டாவது பாகம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் சிம்பு கேங்ஸ்டராக மாறி என்ன மாதிரியான சம்பவங்களை செய்வார் என்பது குறித்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உருவ கேலி குறித்து சிம்பு

உருவ கேலி குறித்து சிம்பு

இதனிடையே, இந்தப் படம் வெளியானதில் இருந்தே விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சிம்பு மற்றும் கௌதம் மேனனை வைத்து செய்து வருகிறார். அவர் தன்னை உருவ கேலி செய்தது குறித்து சிம்பு படத்தின் வெற்றி விழாவில் பேசிய நிலையில், அவரது பழைய குத்து படத்தில், பள்ளத்தாக்கு என்ற வரிகள் பெண்களின் உடலை குறிப்பிடுவதாக அமைந்ததை சுட்டிக்காட்டினார் ப்ளூ சட்டை மாறன்.

கௌதம் மேனன் கமெண்ட்

கௌதம் மேனன் கமெண்ட்

இதனிடையே படத்தின் விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் தாறுமாறாக செய்திருந்த நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் அவரை இறங்கி செய்யணும் போல இருக்கு என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதையொட்டி வெயிட்டிங் என்பது உள்ளிட்ட பல மீம்ஸ்களை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு கௌதம் மேனனை வெறுப்பேற்றி வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

சாதீய அடையாளம்

சாதீய அடையாளம்

தொடர்ந்து சாதீய அடையாளத்துடன் கௌதம் மேனன் உள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கௌதம் மேனன் தன்னை இறங்கி செய்வது குறித்து பேசியதற்கு அடுத்தடுத்த கமெண்ட்களை அவர் தெரிவித்து வருகிறார். மேலும் தனுஷ், சிம்புவை அடுத்தடுத்து காலி செய்த கௌதம் மேனனின் அடுத்த டார்கெட் யார் என்றும் கேள்வி கேட்டுள்ளார்.

நேரடி கொலை மிரட்டல்

நேரடி கொலை மிரட்டல்

இதனிடையே சினிமாவில் வருவது போலவே அனைத்தையும் செய்யலாம் என்று கௌதம் கனவு காண்பதாகவும் அப்படி ஒரு கீறலை தன்மீது போட்டுவிட்டு தமிழகத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது எலைட் வகையாரின் நேரடி கொலை மிரட்டல் ஸ்டைல் என்றும் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நடந்தால் கௌதம் மேனன் தான் காரணம்

விபத்து நடந்தால் கௌதம் மேனன் தான் காரணம்

தொடர்ந்து தனக்கு ஏதாவது பைக் விபத்து நடந்தால் அதை கௌதம் மேனன் கணக்கில்தான் சேர்க்க வேண்டும் என்றும் நேரடியாகவும் அவர்மீது குற்றம் சாட்டியுள்ளார். சினிமாவில் தன்மீது அனைவருக்கும் ஒரு வெறுப்பு உள்ளதாகவும் அதனால் யாரும் தனக்கு ஆதரவாக பேச மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X