Blue Sattai Maran: விஜய், அஜித் இடையே ஓவர் ஆக்டிங் கிடையாது.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஒரே நேரத்தில் தங்களுடைய கேரியரை சினிமாவில் துவங்கினர்.
ஆரம்பம் முதலே இவர்களுக்குள் தொழில் ரீதியான போட்டி நிலவிய நிலையில், தங்களது அதிகப்படியான உழைப்பால், ஏராளமான ரசிகர்களை இவர்கள் பெற்றுள்ளனர்.

இருவரும் காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் என அடுத்தடுத்த களங்களில் தங்களை சிறப்பாக வெளிப்படுத்தி தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
விஜய் -அஜித்திடையே ஓவர் ஆக்டிங் இல்லை என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒரே காலகட்டத்தில் தங்களது திரைப்பயணத்தை துவங்கினர். ஆரம்பத்தில் காதல் படங்களில் தங்களது கவனத்தை செலுத்திவந்த இவர்கள் இருவரும் ஆக்ஷன் களத்தில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து, ஆக்ஷன் ஹீரோக்களாகவும் தங்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஆக்ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ், காமெடி என அனைத்து தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு, பல ஹிட்களை கொடுத்துள்ளனர்.
சினிமாவில் வித்தியாசமான அணுகுமுறையால் இவர்களது, ரசிகர்கள் வட்டமும் அதிகமாக மாறியது. 50 வயதுகளை நெருங்கியுள்ள இவர்கள் தற்போதுவரை அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அஜித் தன்னுடைய 62வது படத்திலும், விஜய் தன்னுடைய 67வது படத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களில் யார் பெரியவர் என்ற போட்டி இவர்களுக்கு உள்ளதோ இல்லையோ, இவர்களது ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.
விஜய் தளபதி என்றும் அஜித் தல என்று ரசிகர்களின் விருப்பத்திற்குரியவர்களாக உள்ளனர். இவர்களின் ரசிகர்கள் அவ்வப்போது, விவாதங்களையும், சமூகவலைதளங்களில் சண்டைகளையும் போட்டு வருகின்றனர். இதையடுத்து அஜித், தன்னை இனிமேல் தல என்று அழைக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். இந்த டைட்டில்களால் சண்டைகள் ஏற்படுவதை தவிர்க்கவே அவர் இந்த முடிவை எடுத்து, அதை நடைமுறையும் படுத்தியுள்ளார்.
இவர்களின் நடிப்பு குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகவே உள்ளது. இருவரும் ஓவர் ஆக்டிங் செய்வதாக விமர்சனங்கள் எழும். இந்நிலையில், இயக்குநரும் பிரபல சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ளார். விஜய், அஜித் இருவரில் சிறந்த நடிகர் யார் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இருவருமே சிறந்த நடிகர்கள்தான் என்று பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து மற்றொருவர், இருவரும் ஓவர் ஆக்டிங் செய்வதாக கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த ப்ளூ சட்டை மாறன், இவர்களின் லவ் டுடே, காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, ஆசை, முகவரி, வாலி போன்ற படங்களை பார்க்க அறிவுறுத்தியுள்ளார். இந்தப் படங்களில் இவர்களின் நடிப்பு இயல்பாக இருக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், இருவருக்கும் ஓவர் ஆக்டிங் இல்லை என்றும் அந்த ரசிகருக்கு புரிய வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











