ரஜினி.. கமல்.. வீடியோ மூலம் வித்தியாசம் சொன்ன ப்ளூ சட்டை மாறன்.. மறுபடியுமா!

சென்னை :நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் திரைத்துறையில் தங்களது ஆளுமைகளை வித்தியாசமாக பதிவு செய்தவர்கள்.

Recommended Video

ரஜினி.. கமல்.. வீடியோ மூலம் வித்தியாசம் சொன்ன ப்ளூ சட்டை மாறன்.. மறுபடியுமா!

தங்களது ஸ்டைலில் சிறப்பான படங்களை கொடுத்து தாமிழில் மட்டுமில்லாமல் இந்தி அளவில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்.

70 வயதுகளை கடந்தும் தற்போதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருகிறார்கள். ரசிகர்களை தொடர்ந்து கட்டிப் போட்டு வருகின்றனர்.

ரஜினி மற்றும் கமல்

ரஜினி மற்றும் கமல்

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இந்திய அளவில் சிறப்பான ஆளுமைகளாக உள்ளனர். கோலிவுட்டில் இவர்கள் தங்களது கேரியரை துவங்கியபோது இவர்களது பயணம் சாதாரணமாகவே இருந்தது. தொடர்ந்து தங்களது வெற்றி இலக்கை இவர்கள் அடைய அதிகமாகவே சிரமப்பட வேண்டியிருந்தது.

ரசிகர்களை கவர்ந்த ஹீரோக்கள்

ரசிகர்களை கவர்ந்த ஹீரோக்கள்

கமர்ஷியலில் மட்டுமில்லாமல் இவர்களின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்களிலும் இவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தியே வந்துள்ளனர். இதன்மூலம் தங்களது ரசிகர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொண்டனர். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து நடித்தப் படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரியவையாக அமைந்தன.

அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வந்தபோது அது ரசிகர்களுக்கு ஷாக்காகவே அமைந்தது. நீண்ட நாட்களாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கையை தள்ளிப் போட்டு வந்த ரஜினியும் அரசியலுக்கு வந்த நிலையில், தன்னுடைய உடல்நலத்தை கருத்தில் கொண்டு அவர் விலகினார்.

ரஜினி, கமல் குறித்த வீடியோ

ரஜினி, கமல் குறித்த வீடியோ

தொடர்ந்து கமல்ஹாசன் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர்கள் இருவருமே தொடர்ந்து நடித்துவரும் சூழலில் அரசியலிலும் முக்கியமான இடத்தில் உள்ளனர். மேலும் அதிகமான விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குணநலன்கள் குறித்து தற்போது விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் வீடியோ மூலம் வித்தியாசப்படுத்தியுள்ளார்.

நேரடியான பதில்

நேரடியான பதில்

அந்த வீடியோவில் ரஜினி மற்றும் கமலின் அரசியல் குறித்த பேச்சுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் ஆளுநரை சந்தித்த ரஜினி, அரசியல் குறித்து பேசியதாகவும் ஆனால் அவை குறித்து எதுவும் சொல்ல முடியாது என்றும் நேரடியாக பதில் சொன்னார். இதேபோல கூட்டணி குறித்து முன்னதாக பேசிய கமல் அதை மிகவும் விளக்கமாக பேசினார்.

இரண்டு டைப் மாணவர்கள்

இரண்டு டைப் மாணவர்கள்

இந்த வீடியோக்களை வெளியிட்ட ப்ளூ சட்டை மாறன், பரிட்சையை எதிர்கொள்ளும் மாணவர்கள் குறித்து ஒரு நபர் ரஜினி, கமலை வைத்து பேசியதையும் இணைத்துள்ளார். அதாவது பரிட்சை எழுவதில் இரண்டு டைப் மாணவர்கள் உள்ளதாகவும் முதல் டைப் மாணவர்கள் ரஜினியை போன்று ஆமாம் அல்லது இல்லை என்று நச்சென்று பதில் சொல்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ரஜினி -கமல் போன்ற மாணவர்கள்

ரஜினி -கமல் போன்ற மாணவர்கள்

எதற்குமே விடை தெரியவில்லை என்றால் போடா ஆண்டவனே நம்ம பக்கம் என்று அவர்கள் நகர்ந்து விடுவார்கள் என்றும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல இரண்டாவது டைப் மாணவர்கள் கமல் போன்றவர்கள் என்றும் 2 மார்க் கேள்விக்கே 20 பக்கம் எழுதுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்

வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்

அவரின் இந்த விளக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக ரஜினி மற்றும் கமல் பேசியுள்ள வீடியோக்கள் அமைந்துள்ளன. ரஜினி நறுக்கென்று பதில் சொல்லிவிட்டு நகர, கமல் ஒரு விஷயத்தை நீட்டி முழக்குகிறார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து சொல்லிவரும் ப்ளூ சட்டை மாறன், தற்போது ரஜினி மற்றும் கமல் இருவரையும் இந்த வீடியோ மூலம் வம்பிழுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X