Blue Sattai: அதிகாரம் இருந்தால்தான் காலில் விழுவார்.. சாரு நிவேதிதா பதிவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி வெளியாகி ஏறக்குறைய இரண்டு வாரங்களை கடந்துள்ளது.
இந்தப் படத்தின் வசூல் இந்த இரு வாரங்களில் மாஸ் கிளப்பி வருகிறது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடி வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக இமயமலை பயணத்தை ரஜினி மேற்கொண்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார்.

ரஜினி குறித்த சாரு நிவேதிதா விமர்சனத்தை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாதவர். குறிப்பாக அவரது படங்களின் ரிலீசின்போது அதிகப்படியான பரபரப்புகளை ஏற்படுத்துவதில் அவர் சிறப்பாக செயல்படுவார். அந்த வகையில் கடந்த 10ம் தேதி அவரது ஜெயிலர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தின் ரிலீசின்போது சென்னையில் இல்லாமல் இமயமலை பயணத்தை மேற்கொண்டார் ரஜினி. இந்தப்பயணத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மேற்கொண்டார்.
ஆனால் முன்னதாக கடந்த மாதத்தில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டில் அவர் பங்கேற்று சிறப்பான பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். குட்டிக் கதையொன்றை சொல்லி விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தினார். காக்கா மற்றும் பருந்தை மையமாக வைத்து கூறப்பட்ட இந்தக்கதை மூலம் அவர் நடிகர் விஜய்யை கார்னர் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. விஜய் ரசிகர்கள், ரஜினி படத்தை நிராகரிப்பதாக கூறி தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி ரிலீசான நிலையில், அதற்கு முன்பாகவே இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், அங்கு பல சாதுக்களையும் பல கோயில்களையும் பார்த்தார். தொடர்ந்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தன்னுடைய மனைவியுடன் சென்று சந்தித்த ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து வணங்கினார். வயதில் இளையவரான அவரது காலில் ரஜினி விழுந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் யோகிகளை சந்திக்கும்போது அவர்களது வயதை பொருட்படுத்தாமல் ஆசிர்வாதம் பெறுவது தனது வழக்கம் என்று இதற்கு விளக்கம் அளித்தார் ரஜினி.

இந்த அவரது செயல் பல விமர்சனங்களை எழுப்பி வருகிறது. ரஜினியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்துவரும் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், இந்த நிகழ்வு குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ரஜினியின் இந்த செயல் குறித்து பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதாவும் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில் பல சாதுக்கள் உள்ள நிலையில் அவர்கள் காலில் எல்லாம் ரஜினி விழமாட்டார். காவியோடு அதிகாரமும் கலந்திருந்தால் மட்டுமே காலில் விழுவார் என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சாரு நிவேதிதாவின் இந்த விமர்சனத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார். முன்னதாக ரஜினி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்திருந்தார். இதையடுத்து உடனடியாக சன் பிக்சர்ஸ், திரையரங்குகளில் தொடர்ந்து புலியின் வேட்டை தொடர்ந்து வருவதாக ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











