Kamal haasan: யாரென்று தெரிகிறதா.. கமல் குறித்து ப்ளூ சட்டை மாறன் கேட்ட கேள்வி!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக பிரபாசுக்கு வில்லனாக கல்கி படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தின் சூட்டிங்கிலும் இணையவுள்ளார்.
இதனிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தொடர்ந்து என்ட்ரி கொடுத்து பல பஞ்சாயத்துக்களை பார்த்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை படைத்து இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்தியன் 2 படத்தை தூசி தட்டி அதில் நடித்து முடித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து பிரபாசிற்கு வில்லனாக கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியிலும் இவர் தொடர்ந்து 7வது ஆண்டாக தொகுப்பாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த இரு வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு பஞ்சாயத்துக்களை இவர் தீர்த்து வருகிறார்.
இதனிடையே அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்திலும் மணிரத்னம் இயக்கத்திலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். இந்தப் படங்களை கமல்ஹாசனே தயாரிக்கவும் உள்ளார். இதில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள KH233 படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல் களத்திலும் சிறப்பான செயல்பாட்டை பார்க்க முடிகிறது.
இவ்வாறு அடுத்தடுத்து தன்னை என்கேஜாக வைத்து வரும் கமல்ஹாசன், தன்னுடைய பிட்னசில் சிறப்பான கவனம் செலுத்தி வருபவர். விக்ரம் படத்தின் சூட்டிங்கின்போது கிடைத்த சிறிய இடைவேளையில் இவர் சிறப்பான வொர்க் அவுட் செய்ததை படக்குழுவினர் வீடியோவாக பகிர்ந்து ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தனர். மேலும் கமலின் பிட்னஸ் ரகசியத்தையும் இதன்மூலம் ரசிகர்கள் உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

பல்வேறு தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்று உலகநாயகனாக கொண்டாடப்பட்டு வருபவர் கமல்ஹாசன். இந்த வயதிலும் தன்னை பிட்டாக வைத்துள்ள கமல்ஹாசனின் சமீபத்திய புகைப்படத்தை இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் யாரென்று தெரிகிறதா என்ற பாடலையும் கேப்ஷனாக வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











