Blue sattai Maran: தமிழ்நாடுன்னா ஜெயிலர்.. ரசிகரின் விமர்சனத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ரஜினிக்கு சர்வதேச அளவில் ஏராளமான வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சமீபத்தில் அவரது சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைகள் அதிகமான அளவில் காணப்படுகிறது.

Director Blue sattai maran shares new comment on Rajinikanth hails by the fan

ரஜினிகாந்த் குறித்து பாராட்டிய ரசிகரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த், பல ஆண்டுகளாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக, சூப்பர்ஸ்டார், தலைவர் என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் ரஜினிக்கு காணப்படுகின்றனர். முத்து படத்தின் தாக்கத்தை தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து 70 வயதை கடந்த நிலையிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் சர்வதேச அளவில் ரிலீசாகி மூன்றாவது வாரத்தில் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்சும் கடந்த சில தினங்களுக்கு முன்பே படம் 500 கோடிகளை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து போட்டிகள் அதிகமின்றி படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

படத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் தன்னுடைய மகனின் சாவிற்கு பழிதீர்க்கும் வகையில்தான் ரஜினி களமிறங்குகிறார். தொடர்ந்து தன்னுடைய மகன் கொல்லப்படவில்லை என்பது தெரிந்து அதை தொடர்ந்த அவரது செயல்பாடுகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளது. படத்தில் ரஜினியின் இந்த செயலுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் ஜாக்கி ஷெராப், மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார். இதில் அதிகமாக ஸ்கோர் செய்தது சிவராஜ்குமார்தான். ரஜினியை தொடர்ந்து சிவராஜ்குமார் மற்றும் வில்லன் விநாயகன் இந்தப் படத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தனர்.

இந்தப் படம் குறித்த பல சர்ச்சைகள் முன்னதாக படத்தின் ரிலீசுக்கு முன்பே துவங்கிவிட்டது. சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து படத்தின் இசை வெளியீடடின்போது ரஜினி சொன்ன குட்டிக்கதை அதிகளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. விஜய்யை அவர் மறைமுகமாக தாக்கியதாக விஜய் ரசிகர்கள் ஆவேசப்பட்டனர். இதனால் ஜெயிலர் படத்தை புறக்கணிப்பதாகவும் அவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

Director Blue sattai maran shares new comment on Rajinikanth hails by the fan

இதனிடையே, ஜெயிலர் படம் குறித்து தொடர்ந்து அதிகமான விமர்சனங்களை வைத்து வருகிறார் இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன். அவரது தொடர் ட்விட்டர் பதிவுகளால் கொலை மிரட்டலை எதிர்கொண்டதாகவும் அவர் முன்னதாக கூறியிருந்தார். ஆனாலும் ஜெயிலர் மற்றும் ரஜினி குறித்த விமர்சனங்களை அவர் விடாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் ஜெயிலர் மற்றும் ரஜினி குறித்த ரசிகர் ஒருவரின் கமெண்ட்டை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில், தலைவர் விஜய் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த நபர், விஜய்யா, அது யார், அப்படி யாரையும் தனக்கு தெரியாது என்று கூறிவிட்டு, திநகர் என்றால் ஜிஆர்டி, திருச்செந்தூர் என்றால் முருகன், கும்பகோணம் என்றால் உப்பிலியப்பன் பிள்ளையார், தமிழ்நாடென்றால் ஜெயிலர் என்று கூறிவிட்டு வேறு யாரையோ குறிப்பிடுகிறீர்களே என்றும் கூறி அவர் முடிக்கிறார். இந்நிலையில் இந்த பேட்டியை பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், காமெடி பண்ணிட்டாராம் எல்லாரும் சிரிங்க என்று கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X