இவங்க தொல்லை தாங்க முடியாதே.. பொன்னியின் செல்வன் 2 டீமை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இதையொட்டி படத்தின் பிரமோஷனை தற்போது படக்குழு துவக்கியுள்ளது. கார்த்தி, த்ரிஷா ஆகியோரின் கேரக்டர் டெவலெப்மெண்ட் வீடியோக்களை பகிர்ந்திருந்தனர்.
தொடர்ந்து நேற்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளையும் வெளியிட்டிருந்தனர். அகநக என்ற இந்தப் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படம்
நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசானது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிரட்டியது. முன்னதாகவே இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தயாரிப்புத்தரப்பு தெரிவித்திருந்த நிலையில், வரும் ஏப்ரல் 28ம் தேதி படத்தின் இரண்டாவது பார்ட் வெளியாகவுள்ளது.

ப்ரமோஷனை துவக்கிய டீம்
படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள நிலையில் தற்போதே படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவக்கியுள்ளனர். படத்தில் கார்த்தி மற்றும் த்ரிஷா, வந்தியத்தேவன் மற்றும் குந்தவையாக மாறிய தருணங்கள் மற்றும் அதற்கான டீமின் மெனக்கெடல்களை உள்ளடக்கி வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதில் அவர்களின் கேரக்டர்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஆடை, அணிகலன்கள், மேக்கப் உள்ளிட்டவையும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

முதல் பாடல் வெளியீடு
படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், முதல் பாகத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்தன. இந்நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏஆர் ரஹ்மான் இசையில் நேற்று மாலை வெளியானது. இந்தப் பாடல் கார்த்தி மற்றும் த்ரிஷாவின் காதல் பாடலாக வெளியானது. ரசிகர்களை கவரும்வகையில் கிராபிக்ஸ் காட்சிகளையும் உள்ளடக்கி இந்தப் பாடல் வெளியானது. இதனிடையே படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் பிஜிஎம்மிற்காக ஏஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் உழைக்கும் புகைப்படங்களும் இன்றைய தினம் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

கார்த்தி -த்ரிஷா உரையாடல்
நேற்றைய தினம் அகநக பாடல் வெளியாகவிருந்த நிலையில், முன்னதாக இளையபிராட்டி என்று கார்த்தி த்ரிஷாவிற்கு ட்விட்டர்மூலம் காதல் தூது அனுப்பினார். இதையடுத்து வானரக்குல இளவரசே என்று பதிலுக்கு அவருடைய ட்வீட்டிற்கு த்ரிஷா ரியாக்ட் செய்தார். இதையடுத்து தங்களது தரிசனம் கிடைக்குமா என்று கார்த்தி கேட்க, த்ரிஷாவோ யோசித்து செய்தி அனுப்புகிறேன் என்று பதிலளித்தார். இவ்வாறு அவர்களது உரையாடல் நிகழ்ந்தது.

பொன்னியின் செல்வன் டீமை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில் அவர்களது இந்த உரையாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார். படம் ரிலீஸ் வரைக்கும் இவங்க தொல்லை தாங்க முடியாதே என்று கலாய்த்துள்ள ப்ளூ சட்டை மாறன், கவுண்டமணியின் ஐயோ.. ராமா என்ற மீம்சை ஷேர் செய்துள்ளார். இதைப் பார்த்த மற்றவர்கள், ரிலீசுக்கு பின்பு அவரது தொல்லை தாங்க முடியாது என்று பதிலுக்கு கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











