Blue Sattai Maran: ஊருக்கு மட்டும் உபதேசம்.. விஷாலை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் விஷாலின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் மார்க் ஆண்டனி படம் இணைந்துள்ளது.

இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த நிலையில், எஸ்ஜே சூர்யா, இயக்குநர் செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், இந்த சிறப்பை பெற்ற விஷாலின் முதல் படம் என்ற பெருமையும் படத்திற்கு கிடைத்துள்ளது.

Director Blue sattai Maran trolls actor Vishals advice to young generation

விஷாலை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான மார்க் ஆண்டனி படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் அவருக்கும் புதிய பாதையை திரைத்துறையில் ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்ததாக அவர் அஜித்தின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் வெற்றி விஷாலுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் வெற்றியை அவர் கொண்டாடி வருகிறார். அடுத்ததாக ஹரி படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. விஷால் -ஹரி கூட்டணியில் உருவாகிவரும் 3வது படம் இது. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் விஷாலுக்கு ஜோடியாகியுள்ளார். படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷால் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் பேசிய விஷால் தன்னுடைய திருமணம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். திருமணம் என்பது மிகப்பெரிய விஷயம் என்றும் அதற்கு சரியான புரிதல், பக்குவம் வேண்டும் என்றும் பேசியுள்ளார். திடீரென ஒரு முடிவை எடுத்துவிட்டு, பின்பு இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தனக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளதாகவும் பேசியுள்ளார்.

மேலும் இன்றைய இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகிவிடாதீர்கள் என்றும் பேட்டியொன்றில் விஷால் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு அடிமையானால் குடும்பம் சீரழிந்துவிடும் என்று கூறிய விஷால், நன்றாக படித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளுமாறும் பெற்றோரை கவனித்துக் கொள்ளுமாறும் அட்வைஸ் கொடுத்திருந்தார். இதனிடையே விஷால் ஊருக்குத்தான் உபதேசம் கொடுப்பதாகவும் சொந்த வாழ்க்கையில் அதற்கு மாறாக நடந்துக் கொள்வதாகவும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Director Blue sattai Maran trolls actor Vishals advice to young generation

முதலில் விஷால் போதைப்பொருள் கடத்தல் படங்களை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் அறிவுறுத்தியுள்ளார். ஹீரோவே போதைப்பொருள் கடத்துகிறார், கஞ்சா அடிக்கிறார் என்றும் ப்ளூ சட்டை மாறன் விஷாலை நேரடியாகவே பேசியுள்ளார். மேலும் ஊருக்கு மட்டும் உபதேசம் என்றும் தனது ட்விட்டர் பதிவில் அவர் விஷாலின் அறிவுரையை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X