Blue Sattai Maran: பப்ளிசிட்டி ஸ்டன்ட்.. ரஜினியுடன் லாரன்சையும் விட்டு வைக்காத ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீசையொட்டி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Director Blue sattai maran trolls Rajini and Raghava lawrence in his twitter page

இந்தப் படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர்கள், போஸ்டர்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், கோவை, ஐதராபாத் போன்ற இடங்களில் படத்தின் ப்ரமோஷன்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ரஜினி, லாரன்சை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் சந்திரமுகி. இந்தப் படத்தினை இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார். ரஜினியின் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு பி வாசு இயக்கி முடித்துள்ளார். இந்த இரண்டாவது பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.

இன்னும் சில தினங்களில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள இந்நிலையில், படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்திற்கு ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், மைசூர் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான அரண்மனைகளில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட செட் அமைத்தும் சூட்டிங் நடத்தப்பட்டது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படத்தின் ரிலீசையொட்டி படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மேலும் ஜெயிலர் படத்தின் சக்சஸிற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு மனிதரின் காலில் விழுவதென்பது தனிப்பட்ட செயல். அதை போட்டோ எடுத்து மீடியாவில் வெளியிட்டு மினி சூப்பர், விளம்பரம் தேடிக் கொள்வதாக இயக்குநர் மற்றும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். ரஜினி காலில் ராகவா லாரன்ஸ் விழுந்து ஆசி பெற்ற புகைப்படத்தையும் அவர் இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். இவராவது வீட்டிற்கு உள்ளே காலில் விழுந்து புகைப்படம் எடுத்தார், ஆனால் அவரோ யோகி வீட்டு வாசலிலேயே காலில் விழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பப்ளிசிட்டி தேடுவதில் தலைவர் எவ்வழியோ தொண்டரும் அவ்வழி என்று ராகவா லாரன்சின் செய்கையை விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். ரஜினியை தன்னுடைய குரு என்று கூறும் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்குவதற்கு முன்னதாகவும் ரஜினியின் ஆசியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X