ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்.. சும்மா விடுவாரா ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மார்க் ஆண்டனி படம் கடந்த மாதத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்த இந்தப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது மார்க் ஆண்டனி.

டைம் டிராவலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா தன்னுடைய நடிப்பில் பின்னி பெடலெடுத்திருந்தார்.
ரஜினி -ஆதிக் சந்திப்பை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த மார்க் ஆண்டனி படம் கடந்த மாதத்தில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிறப்பாக என்டர்டெயின் செய்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இரும்புத்திரை படத்தை தொடர்ந்து விஷாலின் 7 படங்கள் அடுத்தடுத்து சொதப்பிய நிலையில், மார்க் ஆண்டனி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.
இதேபோல எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார். படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவருக்கும் இருவேறு சூழ்நிலைகளில் இருவேறு கெட்டப்புகள் உள்ள நிலையில், இரண்டு கெட்டப்புகளும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. சிறப்பான ஸ்கிரிப்ட் வொர்க்கால் ரசிகர்கள கட்டிப் போட்டுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். அவரது முந்தைய படங்கள் சொதப்பிய நிலையில், வித்தியாசமான ஜானரில் ரசிகர்களை அணுகியுள்ளார்.
ஸ்கிரிப்ட் குறித்த தன்னுடைய இந்த புரிதலுக்கு நடிகர் அஜித்தான் காரணம் என்று முன்னதாக ஆதிக் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார். தன்னுடைய கதை தேர்வு சிறப்பாக அமைய, நேர்கொண்ட பார்வை படத்தன்போது அஜித் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்திலும் அஜித் குறித்த காட்சிகள் இடம்பெற்று அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. மேலும் படத்தில் மறைந்த சில்க் ஸ்மிதாவை கண்முன் நிறுத்தியதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றியையடுத்து கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியையடுத்து நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதிக் ரவிச்சந்திரன் வாழ்த்து பெற்றுள்ளார்.
படம் குறித்து பாராட்டு தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஆதிக் ரவிச்சந்திரனின் தோள்மீது கைபோட்டு புகைப்படத்திற்கு உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்நிலையில், இந்த சந்திப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், ரஜினியை கலாய்க்கும்வகையில் கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய பதிவில் ஒரு காலத்தில் தலைவரின் கால்ஷீட்டிற்காக இயக்குநர்கள் காத்திருந்த காலம்போய் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் ரஜினிகாந்த் ஓய்வில் உள்ளதாக கலாய்த்துள்ளார். இளம் இயக்குநர்களின் அடுத்தடுத்த முயற்சிகளை பாராட்டும் வழக்கத்தை ரஜினிகாந்த் தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அதிக கவனத்திற்கு உள்ளாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநரை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











