Rajinikanth: காவிரி விவகாரம் குறித்து பேச மறுத்த ரஜினி.. சூப்பர்ஸ்டார்.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் வரும் 5ம் தேதி பூஜையுடன் சூட்டிங் துவங்கவுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநராக ஜெய்பீம் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் கமிட்டாகியுள்ளார். படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

கடந்த இரு தினங்களாக தலைவர் 170 படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

Director Blue Sattai Maran trolls Rajinikanth on his silence in cauvery issue

காவிரி விவகாரம் குறித்து பேச மறுத்த ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் காட்டியது. சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் ஜெயிலர் படம் குவித்தது. படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்த ரஜினியின் வழக்கமான ஸ்டைல், அதிரடி சரவெடிகளை பார்க்க முடிந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரிலீசான இந்தப் படத்தின் வசூல் 700 கோடி ரூபாய்களை தாண்டியதையடுத்து இந்த வெற்றியை ரஜினி, நெல்சன், அனிருத் மற்றும் படக்குழுவினருடன் சன் பிக்சர்ஸ் பகிர்ந்துக் கொண்டது.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலும் ரஜினி நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடித்துள்ள நிலையில், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், மும்பை, சென்னை மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங்கையும் சமீபத்தில் ரஜினிகாந்த், முடித்துக் கொடுத்துள்ளார். இதன் வீடியோக்கள், புகைப்படங்களை தயாரிப்புத் தரப்பு வெளியிட்டது.

இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 170 படத்தில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரஜினிகாந்த். இந்தப்படத்தின் சூட்டிங் நாளை மறுநாள் பூஜையுடன் சென்னையில் துவங்கவுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை விமானநிலையத்தில் தன்னுடைய பயணத்தை துவங்கினார் ரஜினிகாந்த். இதையடுத்து செய்தியார்களிடம் பேசிய அவர், படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

முன்னதாக சமீபத்தில் சூப்பர்ஹிட்டடித்த ஜெயிலர் படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ஜெயிலர் படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர்170 படம் மிகவும் அழுத்தமான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு மாஸான என்டர்டெயின்மெண்டை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து ரஜினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விக்கு பதிலளிக்க ரஜினி மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ரஜினியின் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன், வீடியோவில் படங்கள் குறித்த கேள்விகளுக்கு உற்சாகமாக பதிலளித்த ரஜினிகாந்த், காவேரி விவகாரத்தில் பதிலளிக்காமல் நழுவியதை சுட்டிக் காட்டியுள்ளார். சூப்பர்ஸ்டார்.. சூப்பர் சார் என்று கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், இதேபோல அமைதியை ரஜினி காத்துவந்தால் அவரது பான் இந்தியா படங்கள் கர்நாடகாவில் சிறப்பாக ரிலீசாகும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X