Blue Sattai Maran: வித்தியாசமா ப்ரமோட் பண்றாங்களாம்.. விஜய் ஆண்டனியையும் விடாத ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சினிமா நிகழ்வுகளை மட்டுமில்லாமல் அரசியல் நிகழ்வுகளை கேள்விக்குள்ளாக்கி வருகிறார்.
சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தையும் அதன் வசூல் நிலவரங்களையும் அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார்.
இதன்மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே சொல்லிவந்தார்.

விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் ப்ரமோவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இயக்குநர் மற்றும் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சினிமா நிகழ்வுகளை மட்டுமில்லாமல் அரசியல் நிகழ்வுகளையும் கேள்விக்குள்ளாக்கி வருகிறார். கடந்த மாதம் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசான ஜெயிலர் படத்தையும் தொடர்ந்து பல விஷயங்களில் அவர் கேள்வி எழுப்பி வருகிறார். படத்தின் இசை வெளியீட்டிலிருந்தே ஜெயிலர் படத்தை பலவாறாக கலாய்த்தும் கேள்வி எழுப்பியும் வருகிறார்.
ஜெயிலர் படத்தை மட்டுமில்லாமல் மற்ற படங்களையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அடுத்ததாக விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் ப்ரமோவையும் தற்போது கலாய்த்துள்ளார். வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரமோவில் விஜய் ஆண்டனி மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் படத்தின் ப்ரமோஷன் குறித்து பேசுவதாக இந்த வீடியோ அமைந்துள்ளது.
பிரம்மாண்டமான இசை வெளியீட்டை ஏற்பாடு செய்து, அதில் விஜய் ஆண்டனி சர்ச்சைக்குரிய ஏதாவது ஒரு விஷயத்தை அரை மணிநேரத்திற்கு பேச வேண்டும் என்று கூறுகிறார் தனஞ்செயன். தொடர்ந்து டாப் இயக்குநர்களை அழைத்து படத்தை பார்க்க வைத்து ஒபீனியன் வாங்க வேண்டும என்றும் தெரிவிக்கிறார். இவை அனைத்திற்கும் விஜய் ஆண்டனி ஓகே சொல்லிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து பிரீ ரிலீஸ், பிரீமியர் ஷோ செய்ய வேண்டும் என்று கூறும் தனஞ்செயன், நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்கிறார்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும நிலையில், நர்சை தள்ள சொல்லிவிட்டு படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 28 என்று சொல்வதாக இந்த ப்ரமோ காணப்படுகிறது. சமீப காலங்களில் ஒரு படத்தின் ரிலீசின்போது தயாரிப்பு தரப்பு மேற்கொள்ளும் இத்தகைய யுத்திகளைத்தான் தற்போது இந்தப் படம் கேலி செய்துள்ளது. இந்நிலையில் இந்த ப்ரமோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், வித்தியாசமா ப்ரமோட் பண்றாங்களாம், எல்லாரும் கஷ்டப்பட்டு சிரிச்சிடுங்க என்று தன்னுடைய பதிவில் கூறுகிறார்.
நடிகர் விஜய் ஆண்டனியுடன் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் இணைந்துள்ள படம் ரத்தம். சிஎஸ் அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த வீடியோவை பகிர்ந்திருந்த விஜய் ஆண்டனி, யாரும் பயப்படாதீங்க, இப்போ தனஞ்செயன் சார், நர்சு கூட நல்லா இருக்காரு என்றும் கூறியிருந்தார். டைரக்டரும் அங்கதான் இருக்காரு என்றும் கலாய்த்திருந்தார்.


Click it and Unblock the Notifications











