Blue Sattai Maran: லியோ படத்தில் பிடித்த காமெடி நடிகர்.. வில்லன்களை வைத்து செய்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ.
நேற்றைய தினம் சர்வதேச அளவில் வெளியாகியுள்ள லியோ படம் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

லியோ படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். மேலும் படம் குறித்த பல பதிவுகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
லியோ பட வில்லன்களை காமெடியன்களாக்கிய ப்ளூ சட்டை மாறன்: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், அனுராக் காஷ்யப், மடோனா, ஜனனி, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள படம் லியோ. நேற்றைய தினம் சர்வதேச அளவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள லியோ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
லியோ படம் குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். சர்வதேச அளவில் ரசிகர்கள் நேற்றைய தினம் படத்தை கொண்டாடியதை பார்க்க முடிந்தது. இதனிடையே பிரபல சினிமா விமர்சகர் மற்றும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தின் விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ள நிலையில், அவரது நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
மேலும் அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இணையவுள்ளது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். படத்தின் முதல் பாதி ஓகே ரகம்தான் என்றும் அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். படத்தில் வில்லன் கேரக்டர்கள் ஸ்ட்ராங்காக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். எல்சியூ என்ற பெயரில் கமல் பேசுவதெல்லாம் காமெடியாக இருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளார்.
இதனிடையே, அவர் தன்னுடைய மற்றொரு பதிவில் லியோ படத்தில் ரசிகர்களின் பேவரிட் காமெடி நடிகர் குறித்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளார். அதில் சந்தோஷ் குமார் எனும் சாண்டி, அனுராக் காஷ்யப், அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத்தை இணைத்துள்ளார். இவர்களில் யார் லியோ படத்தின் சிறந்த காமெடி நடிகர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். லியோ படத்தின் மிரட்டலான வில்லன்களாக பார்க்கப்படும் இவர்களை காமெடி பீஸாக மாற்றியுள்ளது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் சூட்டிங் துவங்கப்பட்ட லியோ படம் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சூட்டிங்கை துவங்கியது. படத்தில் விஜய் ரசிகர்களை கவரும்வகையில் மாஸான பல காட்சிகள் இருந்தபோதிலும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி இருந்ததுபோல மாஸான வில்லன் லியோ படத்தில் ரசிகர்களை கவரும்வகையில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய LCU காட்சிகளுக்கும் இன்னும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











