Blue sattai maran: ரஜினி கால்ல விழறாரா பார்ப்போம்.. மீண்டும் ரஜினியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. 500 கோடி ரூபாய்களை இந்தப் படத்தின் வசூல் கடந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தன்னுடைய இமயமலை பயணத்தை மேற்கொண்டார் ரஜினிகாந்த். சில நாட்கள் வட இந்தியாவிலும் அவருடைய பயணம் தொடர்ந்தது.

Director Blue sattai marans new post about Rajini makes his fans angry

இந்தப் பயணத்தின்போது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்ததும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

ரஜினியை மீண்டும் வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர். அந்த டைட்டிலை கொண்டே கடந்த சில மாதங்களாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில் அவரது ஜெயிலர் படம் வெளியாகி அவர் எப்போதுமே மாஸ் தான் என்பதை நிரூபித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசான இந்தப் படம் 500 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில், ஜெயிலர் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

அனிருத் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக தமன்னா, ரஜினி ஆட்டத்தில் வெளியான காவாலா பாடல் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்தப் பாடல் கடந்தது. மேலும் ஹுகும் உள்ளிட்ட பாடல்களும் யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் காணப்படுகின்றன. இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் போன்றவையும் காரணமாக அமைந்துள்ளன.

இந்நிலையில் படத்தில் சிறிய கேரக்டர்களில் இணைந்திருந்த சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்றவர்களும் வில்லன் விநாயகன் மற்றும் மகனாக நடித்திருந்த வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் படத்தின் பலத்தில் பங்கு பெற்றுள்ளனர். ரஜினியின் மனைவியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் நடிப்பும் சிறப்பாக அமைந்தது. இவர்கள் அனைவரும் இருந்தாலும் படத்தை தன்னுடைய தோள்களில் சிறப்பாக ஏற்றி படத்தின் வெற்றிக்கு முழுமுதல் காரணமாக அமைந்தார் ரஜினிகாந்த்.

Director Blue sattai marans new post about Rajini makes his fans angry

படத்தின் இசை வெளியீட்டின்போதும் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பகிர்ந்த ரஜினிகாந்த் அதன்மூலம் விஜய் ரசிகர்களின் கண்டனங்களையும் சம்பாதித்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு முதல் தற்போது படம் வெளியாகி 2 வாரங்கள் கடந்த நிலையிலும் தொடர்ந்து நெகட்டிவான பதிவுகளை செய்து வருகிறார் சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன். ரஜினியின் காக்கா, பருந்துக்கதையை ட்ரோல் செய்ய ஆரம்பித்து அவரது வட இந்திய பயணம், உபி முதல்வர் காலில் ரஜினி விழுந்தது வரை தொடர் விமர்சனங்களை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சாதுக்கள் காத்திருப்பதாக புகைப்படத்துடன் இந்த வழியாக ரஜினி வர்றாராம், நம்ம கால்ல விழாறாரா பார்ப்போம் என்ற பதிவையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளார். கடந்த சில தினங்களாக உபி முதல்வர் காலில் ரஜினி விழுந்தது குறித்த பல்வேறு விமர்சனங்களையும் பதிவிட்டு வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது இந்த புதிய பதிவையும் வெளியிட்டு மீண்டும் ரஜினியை வம்பிழுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X