Sir public Review: அரதப் பழசு கதை.. சார் பொதுமக்கள் விமர்சனம் இதோ!
சென்னை: நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவான சார் திரைப்படம் தியேட்டல் இன்று வெளியாகி உள்ளது மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயர் பின்னர் சார் என மாற்றி வைக்கப்பட்டது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தை பார்த்த மக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.
நடிகர் போஸ் வெங்கட் இதற்கு முன் கன்னிமாடம் என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் இரண்டாவது படமாக சார் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இன்று ஒரே நேரத்தில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் பருத்திவீரன் சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்,சித்து குமார் இசையமைத்துள்ளார்.

சார்: புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள மாங்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் சரவணன். அவரின் ஆசையே அந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதுதான். ஆனால், அவரின் ஆசை நிறைவேறுவதற்குள் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். தன்னால் செய்ய முடியாததை தன் மகன் (விமல்) சிவஞானத்தை செய்ய வேண்டும் என்று லட்சியத்தோடு இருக்கிறார். ஆனால், அந்த கிராமத்தில் பல விதமான மூடநம்பிக்கை இந்த லட்சியத்தை அடையவிடாமல் இருக்க இதையெல்லாம் மீறி சிவஞானம் அந்த பள்ளியை தரம் உயர்த்தினாரா.. அப்பாவின் கனவை நிறைவேற்றினாரா என்பதுதான் சார் படத்தின் கதை.
பழைய கதை: இப்படம் இன்று தியேட்டரில் வெளியான நிலையில் படம் பார்த்த பொதுமக்கள், மீண்டும் அதே அடக்குமுறை என்று பழைய காலத்திற்கு சென்றுவிட்டனர். இயக்குநர் ஷங்கர் 2050க்கு போகிறார். இந்தஇயக்குநர் 1947க்கு போகிறார். படத்தில் புதுசா எதுவுமே இல்லை எல்லாமே ஏற்கனவே பார்த்தது போல இருக்கு படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியின் அவசியத்தைப் புரிய வைப்பதே "சார்" படத்தின் கதையாக உள்ளது. இது இயக்குனர் போஸ் வெங்கட்டின் சிறு வயதில் நடந்த உண்மை கதை என்று அவர் கூறியிருந்தார்.

ஒருமுறை பார்க்கலாம்: மேலும், இப்படம் முதல் பகுதியில் மெதுவாக சென்றாலும், இரண்டாவது பகுதியில் சொல்ல வேண்டிய விஷயத்தை அழுத்தமாக இயக்குனர் கூறியிருக்கிறார். விமலின் நடிப்பு வாகை சூடவா படத்தை நினைவூட்டும், சிறிய சிறிய குறைகள் இந்தப் படத்தில் இருந்தாலும், இப்படத்தில் கூறப்படும் சமூக பிரச்சினையுடன் வரும் காதல் மற்றும் காமெடி காட்சிகளுக்காக இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











