Independence Day 2023: சுதந்திர தின கொண்டாட்டம்.. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் தக்ஸ் திரைப்படம்!

சென்னை: வித்தியாசமான நிகழ்ச்சிகள், தொடர்கள், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது கலர்ஸ் தமிழ் சேனல்.

கலர்ஸ் தமிழ் சேனலில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி குமரி மாவட்டத்தில் தக்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.

Director Brindhas Thugs movie to be telecast in Colors tamil channel as Independence day special

இந்தப் படம் கொலை குற்றத்தில் தண்டனை பெறும் ஆயுள் கைதியாக அறிமுக நாயக்ன ஹிருது ஹாரூன் நடித்துள்ளார்.

கலர்ஸ் தமிழில் சுதந்திர தின ஸ்பெஷல் படமாக ஒளிபரப்பாகும் தக்ஸ்: விதவிதமான, வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. இந்த சேனலின் நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் சேனலில் ஒளிப்பரப்பாகும் புதிய புதிய படங்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் வரும் சுதந்திர தினத்தன்று தக்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படத்தில் அறிமுக நாயகனாக ஹிருது ஹாரூன் களமிறங்கியுள்ளார். அவருடன் பாபி சிம்ஹா, ஆர்.கே. சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

தக்ஸ் படத்தை பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா கோபால் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்க, பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹெச்ஆர் பிக்சர்ஸ் என்ற பேனரில் ஜியோ சினிமாவுடன் இணைந்து ரியா தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த கேங்ஸ்டர்கள் சிலரின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு இத்ப் படம் உருவாகியுள்ளது. போலீஸ் - கிரிமினல் மோதலை அடிப்படையாகக் கொண்டு படம் வித்தியாசமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டுள்ளது.

Director Brindhas Thugs movie to be telecast in Colors tamil channel as Independence day special

ஹிருது ஹாரூன் இந்தப் படத்தில் சேது என்ற கேரக்டரில் நடித்திருந்தார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார் சேது. நாகர்கோயிலிலுள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்படும் அவருடைய சிறை வாழ்க்கையின் முதல் நாளில், சில சிறைக்கைதிகள் சிறையிலிருந்து தப்புவதை, சிறை போலீஸாரின் உதவியுடன் தடுக்கிறார். இதனால் சிறையின் தலைமை வார்டன் ஆரோக்கிய தாஸ் ஆதரவைப் பெறுகிறார்.

ஆனாலும், அவர் தனது திட்டத்தை கெடுத்துவிட்ட கும்பலால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார். மேலும் காதலிக்காக சிறையிலிருந்து தப்ப சேது முயற்சிக்கிறார். சிறையிலிருந்து தப்பிக்கும் திட்டத்தை சக சிறைக் கைதியான பாபி சிம்ஹாவிடம் சேது தெரிவிக்கிறார். ஆரம்பத்தில், துரை சிறையிலிருந்து தப்புவதற்கு ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவர் வேலை செய்யும் மார்க்கெட்டில் தனது மனைவி ரவுடி கும்பல்களால் சித்ரவதை அனுபவிப்பதை அறிந்ததும் சிறையிலிருந்து தப்பிக்க ஒப்புக்கொள்கிறார்.

தொடர்ந்து சிலபல காரணங்களால் இவர்களின் தப்பிக்கும் திட்டம் சிக்கலாகிறது. இதையடுத்து வில்லனுடன் மோதும் சேது சிறையிலிருந்து தப்பித்தாரா என்பதாக கதை நகர்கிறது. குமரி மாவட்டத்தில் தக்ஸ் என்ற இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநர் பிருந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தப் படம் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று ஹீரோ தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கலர்ஸ் தமிழில் பிற்பகல் 2 மணிக்கு இந்தப் படம் ஒளிபரப்பாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X