twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்கள் செல்வன் என்ற பெயரை அவர் காப்பாத்திக்கணும்.. சூப்பர் அட்வைஸ் கொடுத்த சீனு ராமசாமி!

    |

    சென்னை : தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி.

    Recommended Video

    Maamanithan Public Opinion | Vijay Sethupathi | Seenu Ramasamy *Kollywood

    முன்னதாக பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி.

    தற்போது கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

    மாஸா என்ட்ரி கொடுத்த விஜய்..உள்ள வந்தா பவரடி.. அண்ணன் யாரு தளபதி !மாஸா என்ட்ரி கொடுத்த விஜய்..உள்ள வந்தா பவரடி.. அண்ணன் யாரு தளபதி !

    நடிகர் விஜய் சேதுபதி

    நடிகர் விஜய் சேதுபதி

    நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தப்படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்தப் படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார். அவரும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்த மேற்கொண்டிருந்த போராட்டத்தின்போது விஜய் சேதுபதியின் நடிப்பு அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

    விஜய் சேதுபதி முகத்தில் தெரிந்த அன்பு

    விஜய் சேதுபதி முகத்தில் தெரிந்த அன்பு

    விஜய் சேதுபதியின் முகத்தில் தெரிந்த அன்பே அவரை தன்னுடைய படத்தின் நாயகனாக தேர்ந்தெடுக்க காரணமாக அமைந்ததாக சமீபத்திய பேட்டியொன்றில் அவர் கூறியுள்ளார். இந்தக் கூட்டணி தற்போது இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் மாமனிதன் என அடுத்தடுத்தப் படங்களில் இணைந்து ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது.

    நாயகன் அந்தஸ்து

    நாயகன் அந்தஸ்து

    தென் மேற்கு பருவக்காற்று படத்திற்கு முன்னதாக சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஒரு கட்டத்தில் நாயகனாக மாறிய பின்பும் இவர் தன்னுடைய நாயகன் அந்தஸ்தை தொடரவில்லை. பல்வேறு வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்.

    வில்லனாக மிரட்டல்

    வில்லனாக மிரட்டல்

    ரஜினி, விஜய், கமல் என அடுத்தடுத்த நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கொஞ்சம் கொடூரமாகவே காணப்பட்டார். இந்நிலையில் இத்தகைய வேடங்களை ஏற்பது குறித்து விஜய் சேதுபதி பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவரது குருவான சீனு ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    வித்தியாசமான கேரக்டர்கள்

    வித்தியாசமான கேரக்டர்கள்

    ஒரு நடிகனாக வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடிப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான் என்றாலும் இத்தகைய நெகட்டிவ் ஷேட்களில் நடிக்கும் போது மக்களின் பரிபூரண அன்பை பெறுவதில் அவருக்கு முழுமை கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் மத்தியில் எதிர்மறையான பிம்பம் விழுவதையும் தவிர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

     மக்கள் செல்வன் என்ற பெயர்

    மக்கள் செல்வன் என்ற பெயர்

    அவருடைய முந்தைய படங்கள் ரசிகர்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தையடுத்து அவருக்கு மக்கள் செல்வன் என்ற பெயர் கிடைத்துள்ளது. இதை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதை அவர் பரிசீலிக்க வேண்டும் என்றும் சீனு ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

     மாமனிதன் படம்

    மாமனிதன் படம்

    இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் மாமனிதன் என்ற படத்தை கொடுத்திருந்தனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார். இந்தப் படத்தில் மிகவும் சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

    English summary
    Director Cheenu ramasamy on Image of Vijay sethupathy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X