ஈழ மக்களின் உயிர்போன கொடூரத்தை விட இப்படம் பெரிதல்ல.. விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குநர் அட்வைஸ்!

சென்னை: உலக தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்று முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாய் சமூக வலைதளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவின் சிறந்த மற்றும் முன்னணி நடிகர்களுல் ஒருவரான விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் பயோ பிக்கில் நடிக்கவுள்ளார்.

800 படம்

800 படம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்திருப்பதால் அவரது பயோ பிக் படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு

ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு

இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான போதே இதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தையா முரளிதரன், ராஜ பக்சேவின் ஆதரவாளர் என்பதால் ஈழத் தமிழர்கள் பலரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கூறி வந்தனர்.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

இருப்பினும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது. இதில் விஜய் சேதுபதி அப்படியே அச்சு அசலாக முத்தையா முரளிதரனை போன்றே இருந்தார்.

ரசிகர்கள் ஆத்திரம்

ரசிகர்கள் ஆத்திரம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதன் மூலம் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகியுள்ளது. இதனால் தமிழ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் கண்டப்படி விஜய் சேதுபதியை திட்டி தீர்த்தனர்.

கடைசிப் படம்

கடைசிப் படம்

சமூக வலைதளங்களில் வெட்கமில்லையா விஜய் சேதுபதி என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரென்ட். இந்தப் படத்தில் நீங்கள் நடித்தால் இதுதான் உங்களின் கடைசிப் படமாக இருக்கும் என்றும் வாழ வைத்த தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாதே என்றும் விளாசித் தள்ளினர்.

தொடர்ந்து நடிப்பாரா?

தொடர்ந்து நடிப்பாரா?

எதிர்ப்புகள் அதிகரித்து வருவதால் விஜய் சேதுபதி தொடர்ந்து அந்தப் படத்தில் நடிப்பாரா அல்லது விலகுவதாக அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபல இயக்குநரான சேரன் விஜய் சேதுபதியிடம் 800 படத்தில் இருந்து விலகிவிடுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

Shame on Vijay Sethupathi • விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் எச்சரிக்கை
விட்டுவிடுங்கள் சகோதரா..

விட்டுவிடுங்கள் சகோதரா..

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களை விட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது.. என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X