பிக்பாஸ் வீட்டில் அசத்தல் ஆட்டம் போட்ட சேரன்! சொக்க வைத்த லாஸ்லியா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் இயக்குநர் சேரனின் நடனம் அசரடித்தது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் நாள் களேபரங்கள் நேற்று ஒளிபரப்பானது. இதில் எளிமையான ஒரு டாஸ்க்கை தான் பிக்பாஸ் நேற்று கொடுத்தார்.
அதில் சக குடும்ப உறுப்பினர்கள் கூறுவதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அதன்படி அனைவருக்கும் ஒவ்வொர டாஸ்க் கொடுத்தனர் குடும்பத்தினர்.

பாடுங்கள் ஆடுகிறேன்
இதில் இயக்குநர் சேரனுக்கு நகைச்சுவையாக நடனமாடுமாறு டாஸ்க் கொடுத்தனர் குடும்பத்தினர். இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் முன்வந்த சேரன் யாராவது பாட்டுப்பாடுங்கள் ஆடுகிறேன் என்றார்.

அசத்தல் குத்தாட்டம்
உடனே குடும்பத்தினர் காத்தடிக்கிது காத்தடிக்கிது.. என்ற பாடலை கோரஸாக பாடினர். அதற்கு அசத்தலாக குத்தாட்டம் போட்டார் சேரன்.

இப்படியும் ஆடுவாரா!
இயக்குநர் சேரன் எப்படி ஆடப்போகிறாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே இப்படிக் கூட ஆடுவாரா என்று யோசிக்கும் வகையில் அசத்தி விட்டார் மனுஷர். அவரது ஆட்டத்தை நெட்டிசன்களும் டிவிட்டரில் வரவேற்றனர்.
சொக்கவைத்த லாஸ்லியா
அவரை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் அழகு செல்லமாக உள்ள லாஸ்லியா ரவுடி பேபி பாடலுக்கு சாண்டியுடன் இணைந்து நடனமாடினார். சும்மா சொல்லக்கூடாது... சாண்டியை விடவும் அற்புதமாக ஆடி சொக்க வைத்து விட்டார்.
கலக்கிய நெட்டிசன்கள்
ஏற்கனவே லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்துள்ள நெட்டிசன்கள் இந்த சான்ஸை மிஸ் செய்வார்களா என்ன? லாஸ்லியா நடனத்தை வைத்து டிவிட்டரையே கலக்கிவிட்டனர்.
இந்த அழகான சிலை செதுக்கப்பட்ட இடம் இலங்கை.. என் இதயத்தை கைது செய்ய மாட்டிவிட்டால் விலங்கை!


Click it and Unblock the Notifications











