சின்னஞ்சிறு தளிர்களை வேறோடு பிடுங்கி எறிகிறார்கள்.. மானிட கயவர்கள்.. பிரபல இயக்குநர் ஆவேசம்!
சென்னை: சிறுமிகள் அடுத்தடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பது குறித்து பிரபல இயக்குநர் ஆவேசமாக டிவிட்டியுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி, அதேபகுதியை சேர்ந்த ராஜா என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கடுமையான தண்டனை
இதுதொடர்பாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

எரித்துக்கொலை
ஜெயப்பிரியாவின் மரணத்திற்கு நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருச்சி அருகே 14 வயது சிறுமி தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.

சேரன் வேதனை
இந்த சம்பவமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சின்னஞ்சிறு பிள்ளைகள் இதுபோன்று சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதை பார்த்து பிரபல இயக்குநரும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு அப்பாவுமான சேரன் கொதித்துள்ளார்.
துவம்சம் வேண்டும்
இதுதொடர்பாக தனது வேதனையையும் ஆத்திரத்தையும் டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் சேரன். அவரது டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, சின்னஞ்சிறு தளிர்களை வேறோடு பிடுங்கி எறிகிறார்கள் மானிட கயவர்கள். வேடிக்கை பார்க்கிறாயா.. இறைவா.. துவம்சம் வேண்டும்.. தொடங்கு உன் ஆவேசத்தாக்குதலை என குறிப்பிட்டுள்ளார்.
புதைத்து விடு
இயக்குநர் சேரனின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரது டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், இங்கே நீங்கள் சின்னஞ்சிறு தளிர்கள் என்று பதிவிட்டது சிறுமிகளை என்று தெரிகிறது அண்ணா.கயவர்கள் என்று சொல்வது காம இச்சை பிடித்த மிருகங்களை அழிக்க வேண்டும். வா இறைவா வா.நல்லவர்களை வாழ விடு! கெட்டவர்களை மண்ணுள் புதைத்து விடு இறைவா! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











