எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை? நடிகரின் கேள்விக்கு சேரனின் நச் பதில்!
Recommended Video
சென்னை: நடிகர் கயல் தேவராஜ் கேட்ட கேள்விக்கு இயக்குநர் சேரன் கொடுத்த பதிலை பலரும் லைக் செய்து வருகின்றனர்.
இயக்குநர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற சேரன், தனது பாசத்தாலும், நேர்மையான குணத்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டபோது பார்வையாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். சேரன் வெளியேற்றப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் விஜய் டிவியையும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் வெளுத்து வாங்கினர்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில்
பலர் சேரன் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதையே விட்டுவிட்டதாக கூறினர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார் சேரன்.
முற்றுப்புள்ளி
இந்நிலையில் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில்,
முற்றுப்புள்ளி...
சில நேரங்களில் அவசியமாகிறது முற்றுப்பெறாத முக்கிய புள்ளிகள் என நாம் நினைத்தவர்களிடமும்.
கேள்விக்குறி..
தானாய் உருவாகிறது காரணமே இல்லாமல் நம்மை வெறுப்பவர்களை பார்த்து..
ஆச்சர்யக்குறி..
பிரமிக்கவைக்கிறது
அளவுகடந்த அன்பு எந்த எதிர்பார்ப்புமின்றி கிடைக்கும்போது.. என பதிவிட்டிருந்தார்.
எந்த புள்ளியில் முடிகிறது?
இந்நிலையில் அழகர் சாமியின் குதிரை, முத்துக்கு முத்தாக, கயல் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தேவராஜ், சேரனிடம் டிவிட்டர் வாயிலாக கேள்வி ஒன்றை கேட்டார். அதாவது எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் முடிகிறது வாழ்க்கை? என கேட்டார்.
வெற்றுப்புள்ளியாய்
அதற்கு சேரன் நீண்ட விளக்கத்தோடு பதிலளித்திருக்கிறார். அதாவது, திருஷ்டிப்பொட்டு, நெற்றிப்பொட்டு, மச்சம் என பிறப்பிலே கரும்புள்ளியில் தொடங்கி... அனைத்தையும் அவிழ்த்துவிட்டு நிர்வாணமாய் வெற்றுப்புள்ளியாய் புதைப்பதில் அல்லது எரிப்பதில் முடிகிறது வாழ்க்கை நண்பரே..
இதற்கிடையில் எத்தனை புள்ளி வைத்து எத்தனை கோலம் போடுகிறோம் நாம்.. என பதிலளித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











