விஜய்யிடம் வருத்தம் தெரிவித்த சேரன்.. விஜய்யே மன்னித்தாலும் தமிழ்நாடு மன்னிக்காதுனு ரசிகர்கள் கமெண்ட்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் தவெக தலைவர் விஜய் தான் அடுத்த முதலமைச்சர் என்பது உறுதியாகிவிட்டது. பெரும்பான்மைக்கு 11 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை வேண்டும் என்பதால் அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தனியார் விடுதியில் தங்கவைத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், மாற்றுக் கட்சியினரை ஆதரவு தரக்கோரி விஜய் கடிதம் எழுதி உள்ளார். இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யை தேர்தல் நேரத்தில் காட்டமாக விமர்சித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று இயக்குநரும் நடிகருமான சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில், " சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிடம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் திரு விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.. உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்று தான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி.

Director Cheran Apologizes to Vijay After Election Win Fans React Strongly Saying Tamil Nadu Won t Forgive

அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாண்பு: இவரது இந்த போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தாலும், விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் இந்த பதிவுக்கு தங்களது எண்ணத்தை கமெண்ட்ஸாக பதிவிட்டு வருகிறார்கள். அதாவது ஒரு இணைய வாசி, " விமர்சனங்களுக்காக வருந்த வேண்டாம்... நல்ல விமர்சனங்கள் இன்னும் எங்களை கூர்மைப்படுத்தும்... கற்று கொடுக்கும்... ஆட்சியில் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்...தவறு இல்லை... தங்களின் இந்த மாண்பு போற்றத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மன்னிக்காது: அதேபோல் மற்றொருவரோ, " தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன், படுத்தே விட்டார். ஆனால் இப்படிப்பட்ட இழிவான செயலை, தளபதி மன்னித்தாலும், தமிழக மக்கள் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார். சேரனின் பதிவும் அதற்கான பதில்களும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X