twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோமகன் மரணம்.. எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. சேரன் உருக்கம்!

    |

    சென்னை: ஆட்டோகிராஃப் கோமகன் மறைவு செய்தி நெஞ்சை நொறுக்குவதாக இயக்குநர் சேரன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Autograph பட நடிகர் Komagan காலமானார் | ovvoru pookalume, Cheran

    இயக்குநர் சேரன் இயக்கி நடித்த படம் ஆட்டோகிராஃப். 2004ஆம் ஆண்டு வெளியான இந்தி படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலில் நடித்தவர் கோமகன்.

    என்ன வாய் மட்டும் தான் வேலை செய்யுது.. வித்தியாசமான குரலாலே தமிழ் சினிமாவில் கலக்கிய பாண்டு!என்ன வாய் மட்டும் தான் வேலை செய்யுது.. வித்தியாசமான குரலாலே தமிழ் சினிமாவில் கலக்கிய பாண்டு!

    அந்த பாடலில் உணர்வுபூர்வமான சில வரிகளை பாடி ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ராகப்ரியா என்ற இசைக்குழுவை நடத்தி வந்த கோமகன் சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.

    சேரன் உருக்கம்

    சேரன் உருக்கம்

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோமகன், நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு இயக்குநர் சேரன் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

    நெஞ்சை நொறுக்கியது

    இதுதொடர்பான அவரது இரங்கல் பதிவில், வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. என பதிவிட்டுள்ளார்.

    காதல் திருமணம்

    காதல் திருமணம்

    பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்ட கோமகன் அனிதா என்பவரை பெற்றோரின் எதிர்ப்புகளையும் மீறி காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு மோவின், மோனஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

    பெரும் சோகம்

    பெரும் சோகம்

    தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இன்று ஒரே நாளில் குணச்சித்திர நடிகர் பாண்டு மற்றும் பாடகரும் நடிகருமான கோமகன் ஆகிய இரண்டு பேர் பலியாகியிருப்பது தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Read more about: கோவிட் 19
    English summary
    Director Cheran condoles for Komagan demise. Singer Komagan passed away due to Covid 19.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X