இந்த செய்தி என்னையே உலுக்குகிறது.. எப்படி தாங்குவாய் மகளே.. எப்படி ஆறுதல் சொல்வது.. சேரன் உருக்கம்!

சென்னை: பிக்பாஸ்பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்த தகவல் தன்னை உலுக்குவதாக இயக்குநர் சேரன் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Recommended Video

Losliya விற்கு ஆறுதல் சொன்ன சேரப்பா | RIPMariyanesan

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சக போட்டியாளரான கவினை காதலித்தார். ஆனால் அவருடைய காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை.

கோபப்பட்ட மரியநேசன்

கோபப்பட்ட மரியநேசன்


குறிப்பாக லாஸ்லியாவின் அப்பா மரியநேசனுக்கு கவினுடனான காதல் பிடிக்கவில்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு மகளை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மரியநேசன், அந்த கோபத்தை அங்கேயே வெளிப்படுத்தினார்.

வைரலான வீடியோ

வைரலான வீடியோ

மகளை ஏறெடுத்து பார்க்காமல் தனது கோபத்தை காட்டினார். லாஸ்லியா கதறியபோதும், அவரின் காதலால் தான் அவமானப்பட்டதாக முகத்தை பார்க்க மறுத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

ஆர்மி தொடங்கிய ரசிகர்கள்

ஆர்மி தொடங்கிய ரசிகர்கள்

இதனால் கவரப்பட்ட ரசிகர்கள் மரியநேசனுக்கு என தனி ஆர்மியை தொங்கினர். சக போட்டியாளரான இயக்குநர் சேரன், ஒரு சாயலில் தனது அப்பாவை போன்றே இருப்பதாக கூறி அவரை சேரப்பா என்று அழைத்து வந்தார். அவர்களுக்கு இடையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு அழகான அப்பா மகள் உறவு இருந்தது.

மரியநேசன் மரணம்

மரியநேசன் மரணம்

லாஸ்லியாவின் பெற்றோரும் இயக்குநர் சேரன் மீது மிகுந்த மரியாதை கொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தங்களின் மகளுக்காக அவருக்கு அத்தனை நன்றிகளை கூறினர். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று இரவு திடீரென காலமானார்.

சேரன் இரங்கல்

சேரன் இரங்கல்

அவரது மறைவு செய்தியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். சமூக வலைதளங்களில் மரியநேசனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகினற்னர். அந்த வகையில் இயக்குநர் சேரனும் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எப்படித்தாங்குவாய் மகளே..

இதுதொடர்பான அவரது டிவிட்டில்,லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே.. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.. என குறிப்பிட்டுள்ளார்.

மகள்களோடு மகளாக

இயக்குநர் சேரனின் இரங்கல் பதிவை இந்த ரசிகர், இனிமேல் நீங்கள்தான் லாஸ்லியாவை பார்த்துக்கொள்ள வேண்டும் சார் உங்கள் மகள்களோடு மகளாக...நாங்கள் அப்படித்தான் பார்த்தோம் உங்கள் உறவை, இனியும்... என பதிவிட்டுள்ளார்.

மனசு நொறுங்கிவிட்டது

சேரனின் பதிவை பார்த்த இந்த ரசிகர், பாவம் இளம் தந்தை மகள்களின் நல்லவற்றை இருந்து பாரக்காமால் சீக்கிரமா போயிட்டார். அவர ரொம்ப பிடிக்கும் பிக்பாஸ் பார்த்ததில் இருந்து. அந்த பொண்ணுங்க.. அம்மா கடவுளே பாவம். மனசு நொறுங்கிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

எவராலும் ஈடுசெய்ய முடியாது

சேரனின் பதிவை பார்த்த இந்த ரசிகர், இதை தாங்கும் சக்தியை இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்கு வேண்டுகிறோம்...
என்றும் உங்கள் தந்தை உங்களுடன் இருந்து உங்களை வழிநடத்துவார்... அவரது இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாதது... தைரியமாக இருங்கள்.. என ஆறுதல் கூறியுள்ளார்.

சோகம் சூழ்ந்துகொண்டதே

இயக்குநர் சேரன் பதிவிட்ட இரங்கல் செய்தியை பார்த்த இந்த நெட்டிசன், நல்ல தந்தை, அழகான குடும்பம். இப்படி சோகம் வந்து சூழ்ந்து கொண்டதே.. தைரியமாக இருங்கள் லாஸ்லியா என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X